முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலத்தை அபகரித்ததாக தி.மு.க. நகர கழக செயலாளர் கைது

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, ஜூலை.16 - கோவையில் தி. மு.க. நிர்வாகிகள் நிலமோசடி செய்தது தொடர்கிற து. மீண்டும் ஒரு தி.மு.க. நிர்வாகி ரூ. 1 கோடி மதிப்புள்ள 6.75 சென் ட் நிலத்தை அபகரித்தது அம்பலமாகி உள்ளது. 

கோவையில் நில அபகரிப்பு மோசடி வழக்கில் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆனந்தன் கைது செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் கமிஷ னர் அலுவலகத்தில் அபகரிப்பு புகார் அளிக்க தனி அலுவலகம் ஏற்ப டுத்தப்பட்டது. இங்கு நாள் தோறும் நில மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வந்தனர். 

கோவை, திருச்சி ரோடு, ஒண்டிப் புதூரைச் சேர்ந்தவர் சீனிவாசன், இறந்து விட்டார். இவரது மனைவி சசிகலா(38). இவர்களுடைய தந்தை ராமசாமி நாயுடு. இவர் தனது உயிலில் சசிகலா மகன் கஜன்(14) என்ப வருக்கு 6.75 சென்ட் நிலத்தை சொந்தமாக்கி எழுதி வைத்துள்ளார். 

மேலும், கஜன் மேஜரானால் அச்சொத்தை அளிக்க வேண்டும். அதுவ ரை தன் மருமகள் சசிகலா கார்டியனாக இருக்க வேண்டும் என ராம சாமி எழுதி வைத்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 27.7.2004 -ம் தேதியன்று மாமனார் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் மருமகள் சசிகலா முயன்று ஒண்டிப் புதூரைச் சேர்ந்த மனோகரன் மற்றும் ராஜா ஆகியோருக்கு அச் சொத்தை விற்று, சிங்காநல்லூர் சார்பதிவகத்தில் பதிவு செய்துள்ளனர். 

மேலும், மீன்கடை சிவா, பாலன், ராஜா, மனோகரன் ஆகியோரிடம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார். அதில், மாதம் ரூ. 5 ஆயிரத்துக்கு இதை வாடகைக்கு விடுவதாக கூறப்பட்டுள்ளது. 

பின்பு, மீன்கடை சிவா, காயத்திரி பாலன் உட்பட 5 பேரும் அந்த இடத்தை அபகரிக்க சசிகலாவை மிரட்டி உள்ளனர். மேலும், முன்னா ள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பாரி ஆகியோருக்காக இடம் வாங்கப்பட்டுள்ளது என மிரட்டி உள்ளனர். 

இதையடுத்து கடந்த 26.6.2011 ம் தேதி சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டே சனில் சசிகலா புகார் செய்தார். இதனால் கடந்த 1 -ம் தேதி சசிகலா வை மிரட்டி உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் நில அபகரிப்பு மீட்பு பிரிவு உத வி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போ லீசார் மீன்கடை சிவாவை அவரது வீட்டில் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மீன்கடை, சிவாவை மத்திய குற்றப் பிரிவு அலு வலகத்தில் வைத்து விசாரித்தனர். மீன்கடை சிவா, கோவை மாநகர தி.மு.க. 2 -வது பகுதி செயலாளராகவும், சிங்கை நகர பகுதி கழக செ யலாளராகவும் உள்ளார். 

இதனால், நேற்று மதியம் முதல் கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க. வி னர் குவிந்தனர். தகவலறிந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனி ச்சாமி, அவரது மகன் பைந்தமிழ் பாரி, தி.மு.க. நிர்வாகி உதயகுமார்  மாநகராட்சி துணை கமிஷனர் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்ட மீன்கடை சிவாவை சந்திக்க வந்தனர். 

கடந்த ஆட்சியில் கோவையில், தி.மு.க. நிர்வாகிகள் நில மோசடி மட்டுமில்லாமல் விதிமீறிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என் பதும், நில அபகரிப்பில் தி.மு.க. நிர்வாகிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர், என்பதும் இந்த கைது நடவடிக்கைகள் மூலம் அறியமுடிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago