முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி கற்பழிப்பு வழக்கு: தேடப்பட்ட டாக்டர் தற்கொலை

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.16 - கேரள மாநிலம் பரவூரை சேர்ந்த மாணவி கற்பழிப்பு வழக்கில் இதுவரை 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். இவர்களில் சிலர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். அவர்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் பிடிக்கும் நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் மேற்கொண்டுள்ளனர். 

வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்களில் கேரளாவை சேர்ந்த டாக்டர் விபின் சக்காரியாவும் ஒருவர். கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் உள்ள அபார்ட்மெண்டில் டாக்டர் விபின் சக்காரியா உட்பட 3 பேர் மாணவியை அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். போலீசார் டாக்டரை தேடிய போது அவர் தலைமறைவாகி இருந்தார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் சவுதி அரேபியாவில் இருப்பது தெரியவந்தது. அவரை பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டது. 

அதன்படி சர்வதேச போலீசாரும் டாக்டர் விபின் சக்காரியா குறித்து விசாரித்தனர். அப்போது விபின் சக்காரியா சவுதி அரேபியாவில் தம்மாம் என்ற இடத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுவது தெரிய வந்தது. ஆனால் அவர் கடந்த சில நாட்களாக அங்கிருந்தும் மாயமாகி இருந்தார். அதன் பேரில் சவுதி அரேபியா போலீசார் அவரை தேடி வந்தனர். 

இந்த நிலையில் சவுதி அரேபியா தலைநகர் பாக்ரைன் பகுதியில் கடல் பாலத்தின் அருகில் டாக்டர் விபின் சக்காரியா பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டாக்டரின் உறவினர்கள் அவரது உடலை கேரளாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago