முக்கிய செய்திகள்

கறுப்பு பணத்தை மீட்க புலனாய்வு குழு: நிதி அமைச்சகம்

Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.16 - வெளிநாடுகளில் இந்தியர்கள் மறைத்து வைத்துள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வர சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை நியமிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை கேட்பது தொடர்பாக இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இநதியாவில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பல இந்தியர்கள் தங்களது பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்த கறுப்பு பணத்தின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று நாட்டின் பிரதான கட்சியான பாரதீய ஜனதா கட்சி உள்பட பல எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக ஒரு புலனாய்வு குழுவை அமைக்க யோசனை செய்யப்பட்டுள்ளது. 

இந்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை கேட்க மத்திய நிதி அமைச்சகமும் மத்திய சட்ட அமைச்சகமும் திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பான முடிவு இன்னும் 2 அல்லது 3 தினங்களில் எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: