முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜ் பிநந்தநாள்: முதல்வர் மலர் தூவி மரியாதை

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.16 -  காமராஜர் பிநந்தநாளை முன்னிட்டு நேற்று கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். பெருந்தலைவர் காமராஜரின் 109 வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.  சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜரின் சிலை அரசு சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  இந்த சிலைக்கு அடியில் அவரது திருஉருவப்படம் அலங்கரித்தும் வைக்கப்பட்டிருந்தது.  காலையில் இருந்தே பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா நேற்று மதியம் 2 மணிக்கு கடற்கரைச் சாலையில் சிலை அமைந்துள்ள இடத்திற்கு வந்தார். காமராஜரின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியைதை செலுத்தினார்.  அப்போது அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம் , செங்கோட்டையன்,   நத்தம் விஸ்வநாதன், கே,பி, முனுசாமி, சி.வி. சண்முகம், செல்லூர் ராஜூ,  செந்தமிழன், செந்தில் பாலாஜி, ஆர்.பி. உதயகுமார்,  அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, பச்சைமால்,  தங்கமணி, பழனியப்பன், சின்னையா, முகமுது ஜான்,  செந்தூர்பாண்டியன்,  எஸ்.பி. வேலுமணி, எம்.சி. சம்பத், சண்முகவேலு, புத்திசந்திரன், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட தமிழக அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்து காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  பா.வளர்மதி, விஜயபாஸ்கர், வாலாஜாபாத் கணேசன், கொறடா பி.மோகன்,  ஜக்கையன், கமலகண்ணன், வேணுகோபால் எம்.பி.  மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா மற்றும் பிரமுகர்கள் , நிர்வாகிகள் திராளாக கலந்தகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்