முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமர்செட் அணி ரன்குவிப்பு - இந்திய பவுலர்கள் திணறல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

டவுன்ட்டன், ஜூலை 17 - இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் சோமர்செட் அணி அதிரடியாக ரன்களை குவித்தது. விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பவுலர்கள் திணறுகிறார்கள்.இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஸ்ட்ராஸ் தலைமையிலான அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் 1 டுவெண்டி -20 போட்டி, 4 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றது. டெஸ்ட் அரங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடர் பெரும் சவாலாக இருக்கும் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்தின் கவுன்டி அணியான சோமர்செட் அணிக்கு எதிராக 3 நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு கவுதம் காம்பீர் தலைமை வகித்தார். சோமர்செட் அணிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமை வகிக்கிறார். டாஸ் வென்ற சோமர்செட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஸ்ட்ராஸ் மற்றும் அருள் சுப்பையா ஆகியோர் களமிறங்கினர். அருள் சுப்பையா மலேசிய தமிழர். இவர் மலேசிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக கடந்த 1999 முதல் விளையாடி வருகிறார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டுமுதல் சோமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார். அருள் சுப்பையா ஒரு ஆல்ரவுண்டர் குறிப்பிடத்தக்கது.    

ஸ்ட்ராஸ், சுப்பையா இருவரும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக ஸ்ட்ராஸ் அதிரடியாக விளையாடினார். அருள் சுப்பையா துவக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் இணைந்து சோமர்செட் அணியின் ஸ்கோரை 101 க்கு உயர்த்தியபோது 78 ரன்களை எடுத்திருந்த ஸ்ட்ராஸ், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித்மிஸ்ராவின் பந்தில் கீப்பர் சாகாவினால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக காம்ப்டன் களமிறங்கினார். இதன்பிறகு சுப்பையாவும், காம்ப்டனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  காம்ப்டன் 74 பந்துகளில் 50 ரன்களை குவித்தார்.  அருள்சுப்பையா 179 பந்துகளில் 100 ரன்களை அடித்தார்.  அணியின் எண்ணிக்கை 324 க்கு உயர்ந்தபோது காம்ப்டன், பார்ட்டைம் பவுலர் சுரேஷ் ரெய்னாவின் பந்துவீச்சில் யுவராஜ் சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 88. இதையடுத்து சோமர்செட் அணியின் ஜோன்ஸ் களமிறங்கினார். இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சோமர்செட் அணி 76.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 ரன்களை குவித்தது. அந்த அணியின் அருள்சுப்பையா ஆட்டமிழக்காமல் 222 பந்துகளில்  145 ரன்களை குவித்துள்ளார். மேலும் ஜோன்ஸ் 1 ரன் எடுத்து களத்தில் உள்ளார்.  இந்திய தரப்பில் அமித்மிஸ்ரா, சுரேஷ் ரெய்னா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள்  இடையே வருகிற 21 ம் தேதி  முதலாவது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் சோமர்செட் அணிக்கு எதிரான இந்திய அணியின் பந்துவீச்சு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக ஜாஹீர்கான் போன்ற அனுபவ பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த முடியாதது ஆச்சரியமான விஷயம். முனாப் பட்டேல் சிக்கனமாக பந்துவீசினாலும் அவராலும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. பந்துவீச்சில் இந்திய அணி முழுக் கவனம் செலுத்தினால் மட்டுமே வலுவான இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சாதிக்க முடியும். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் என்று ஆரூடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் வாகனும் இங்கிலாந்து அணி வலுவான அணி என்று குறிப்பிட்டுள்ளதோடு, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ட்ரெம்லெட், ஆன்டர்சன் ஆகியோர் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago