ஏற்காட்டில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
jayalalitha

 

சென்னை, மார்ச். 2 - ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட  சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (2.3.2011 ​ புதன் கிழமை) நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை. மாறாக, மக்களை வாட்டி வதைக்கின்ற, மக்களை சுரண்டுகின்ற ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சேலம் புறநகர் கிழக்கு மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி ஒன்றியத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் உபயோகத்திற்காக 1500 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து nullநீர் எடுக்கப்படுகின்றன என்றும், இதன் விளைவாக இந்தத் தொழிற்சாலையை சுற்றியுள்ள 30​க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதாகவும், 1ஙூ  லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிnullநீரின்றி திண்டாடி வருவதாகவும், இந்த சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறுகின்ற புகை காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு விதமான நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி இருப்பதாகவும், சிமெண்ட ஆலைக்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்வி கற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளுக்கு லாரிகள் அடிக்கடி வந்து செல்வதன் காரணமாக சாலைகள் பழுதடைந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், குறைவழுத்த மின்சாரம் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

 இதே போன்று, அயோத்தியாபட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், ஏற்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகள், மின் வெட்டுப் பிரச்சினை, குடிநீnullர்ப் பிரச்சினை ஆகியவை தலைவிரித்து ஆடுவதாகவும் புகார்கள் வருகின்றன. மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிலைமை இப்படி இருக்க, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஊர் சொத்துக்களை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.  மணல் கொள்ளை, அரிசி கடத்தல், நில மோசடி போன்ற சட்டவிரோதச் செயல்கள் மூலம் வருகின்ற பணம் போதாது என்று, உலகமே வியக்கும் வண்ணம் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் ஊழல் புரிந்து இருக்கின்றனர்.  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற டைனமிக்ஸ் பால்வா நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் சென்றிருப்பதும், சிவசங்கரனின் எஸ்.டெல் நிறுவனம் கலைஞர் டிவி​யை துவக்குவதற்கு கணிசமான தொகையை கொடுத்திருப்பதும், ஏர்செல் நிறுவனம் கருணாநிதியின் குடும்ப நிறுவனமான சன் டைரக்ட் டிவி​யில் 675 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளன.  

இதிலிருந்து இந்த இமாலய ஊழலின் பின்னணியில் இருப்பவர்கள் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் என்பது தெளிவாகிறது.  ஆனால், இந்த ஊழலின் பின்னணியில் உள்ள இவர்கள் யாரும் இதுவரை விசாரிக்கப்படவோ, கைது செய்யப்படவோ இல்லை.  எனவே,  2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் பின்னணியில் உள்ள கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அவல நிலைமைக்குக் காரணமான, வாழப்பாடி ஒன்றியத்தில் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற  மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், சிமெண்ட் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகளை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று  (2.3.2011  புதன்  கிழமை) காலை 10 மணியளவில், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்,  ஜெயலலிதா பேரவைச் செயலாளர்  நயினார் நாகேந்திரன்  தலைமையிலும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்  எஸ்.கே. செல்வம்  முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக்  கண்டன ஆர்ப்பாட்டத்தில், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும்,  உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: