முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை. ஜூலை 17 - சென்னை ஐகோர்ட் வளாகத்தில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கும் மாற்றுமுறை தீர்வு மையத்திற்கான கட்டிடத்திற்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்டமாஸ் கபீர் அடிக்கல் நாட்டினார். 

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் 20 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 3 அடுக்குகளை கொண்ட கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் மாற்று முறை தீர்வு மையத்துக்கான கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக 30 கோடி ரூபாயை 13 வது நிதி கமிஷன் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கோடி ரூபாய் என்ற விகிதத்தில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் வளாகத்தில் இயங்கி வந்த போலீஸ் நிலையம் பின்புறம் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் 3 அடுக்குகளை கொண்டதாக இந்த கட்டிடம் இருக்கும். இதற்காக 5 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு, மத்தியஸ்த மையம், சமரச மையம் என மாற்று முறைகளில் தீர்வு காண்பதற்கான மையங்கள் அனைத்தும்  ஒருங்கிணைந்து இயங்கும் வண்ணம் இந்த கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன. 

இந்த புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சென்னை ஐகோர்ட் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்டமாஸ் கபீர் அடிக்கல் நாட்டி பேசினார். தமிழக சட்டம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். 

அமைச்சர் செந்தமிழன் பேசியதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் ஒளிமையமான  எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின்னர் சாதகமான சூழ்நிலைகள் உருவாகியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஐகோர்ட் வளாகத்தில் மாற்று குறை தீர்வு மைய அடிக்கல் நாட்டு விழாவாகும். முதல்வர் ஜெயலலிதாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் எப்போதும் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆகும். 

ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையோடு 2002-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்ட பள்ளி துவக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா தனது உரையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் சட்டம் படித்த மாணவி ஒருவர் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய சட்டப் பள்ளியில் படித்தவர் ஆவார். அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் சட்டம் படித்த ஒருவர் முதலிடத்தை பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். சட்டப் பள்ளியை துவக்கிய முதல்வருக்கே இந்த பெருமை சேரும். 

நீதித்துறையை மேம்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இலவச சட்ட உதவி கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் இதர விஷயங்கள் காரணமாக எந்த ஒரு குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படுவதை தடுக்கவும், சமமான வாய்ப்புகள் கிடைப்பதற்கும் அரசு உறுதி செய்கிறது. 

இலவச சட்ட உதவி ஏழை மக்களுக்கு கிடைப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 13 வது நிதிக் கமிஷன் நீதித்துறை மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். அதேபோல் தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்துள்ளார். 

ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவிகள் இலவசமாக கிடைக்க ஜெயலலிதா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 2006-ம் ஆண்டில் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 2 வது முறையாக பட்டமளிப்பு விழாவில் பேசியபோது, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த தனி கவனம் செலுத்தி வருகிறார். 

இவ்வாறு அமைச்சர் ஜி.செந்தமிழன் பேசினார். 

விழாவில் 13 வது நிதி கமிஷன் கண்காணிப்புக்குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி வரவேற்று பேசினார். மாநில சட்டப் பணிகள் ஆணையக்குழு நிர்வாக தலைவர் நீதிபதி தர்மாராவ், ஐகோர்ட் நீதிபதிகள் டி.முருகேசன், நாகப்பன்,  அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், போலீஸ் கமிஷனர் திரிபாதி, ராஜலட்சுமி எம்.எல்.ஏ., மீனவர் அணி துணை செயலாளர் ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

சென்னை உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் கமிட்டி தலைவர் நீதிபதி பானுமதி நன்றி கூறினார். ஐகோர்ட் பதிவாளர் விமலா, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் நீதிபதி தேவதாஸ், மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் கே.கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago