முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் இன்று அ.தி.மு.க. மே தின பொதுக்கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.17 - மதுரையில்அதிமுக சார்பில் இன்று 4 இடங்களில் மேதின பொதுக்கூட்டம் நடக்கிறது என்று அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க மே தினம் பொதுக்கூட்டம் சட்டமன்ற தேர்தல் பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது இந்த கூட்டம் மதுரையில் 4 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முனிச்சாலையில் நடைபெறும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் நெல்லை சடகோபனும், பழனி முத்துவும், அருள்தாஸ்புரத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் லெனினும், சத்தியமூர்த்தியும், பழங்காநத்தத்தில் தலைமை கழக பேச்சாளர் கணபதியும்,  கோவை புகாரியும் பேசுகின்றனர்.  புதூரில் தலைமை கழக பேச்சாளர்கள் தேனி ராமர், தீக்கனல் லட்சுமணன் ஆகியோர் பேசுகின்றனர். 

  இந்த கூட்டங்களில் எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.  எனவே பகுதி கழக, வட்டகழக, தொகுதி கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள்,  எம்.எல்.ஏ.க்கள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்ககேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறிஉள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்