முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யானந்தா ஆசிரமத்தில் பெளர்ணமி விழா: பக்தர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

பொன்னேரி, ஜூலை.17 - கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டத்திலுள்ள பிடதியில் அமைந்துள்ள நித்யானந்தா தியானபீடம் 2002-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆசிரமம், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், கனடா, துபாய் உள்ளிட்ட 34 நாடுகளில் 1200 கிளைகளோடு சீடர்கள், பக்தர்கள் ஆதரவாளர்கள் உள்பட ஒருகோடி பக்தர்களுடன் பரந்து விரிந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் நேற்று முன்தினம் குவு பெளர்ணமி விழா கோலாகாலமாக கொண்டாடப்பட்டது.  முன்னதாக தமிழ்நாட்டு பக்தர்கள் 250 பேர் திருவண்ணாமலையிலிருந்து தலையில் இருமுடி சுமந்து பாத யாத்திரையாக சுமார் 350 கி.மீ தூரம் நடந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பிடதி வந்து சேர்ந்த அவர்களை சன்னியாசிகள் வரவேற்று, நித்யானந்தர் முன்னிலையில் பாதபூஜை செய்து கவுரவித்தனர். மறுதினமான நேற்று காலை 6.00 மணிக்கு கொடியேற்றத்துடன் குரு பெளர்ணமி விழா தொடங்கியது. ஆசிரம வளாகத்திலுள்ள ஆனந்தேஸ்வரி சமேத ஆனந்தேஸ்வரருக்கு நித்யானந்தா சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் ஆலயத்தின் பின்புறம் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை சுற்றி வந்து அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு மலர் பூஜை செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து ஆசிவழங்கினார். இதனைத் தொடர்ந்து தனது தியான சக்தியரின் மூலம் ஒவ்வொரு எழுச்சி பெற செய்து அதன் விலைவாக உடலில், மனதிலுள்ள துக்கங்களையும், கவலைகளையும், போக்க முடியும் என்பதையும் நித்யானந்தா விஞ்ஞானபூர்வமாக நிரூபித்து காட்டினார்.

இந்த ஆராய்ச்சி அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் கானக்பாண்டே பெங்களூர் ராஜீவ்காந்தி மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிருஷ்ணா சர்மா உள்ளிட்ட அறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஊடகத்துறை  என திரளாக கூடியிருந்த் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியின் நித்யானந்தா பிட்சஷை வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. இவ்விழாவிற்கு உலகெங்கிலும் இருந்து 34 நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக வைத்தீஸ்வரர் என்ற திருக்குளத்தில் அமைந்துள்ள 21 அடி சிவலிங்கத்திற்கு தீப ஆராதனைகள் செய்து நித்யானந்தர் நிறைவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்