முக்கிய செய்திகள்

கறுப்பு பணத்தை ஒழிக்க சட்டம்: ஜனாதிபதி

Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.17 - கறுப்பு பணத்தை ஒழிக்க சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார். வருமான வரித்துறையின் 150 வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறுகையில், கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது போல் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தையும் ஒழிக்க அந்நாடுகளின் ஒத்துழைப்புடன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதற்கு வசதியாக சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கறுப்பு பணத்தை பதுக்குவோர் வெளிநாடுகளை தங்களது அடைக்கலமாக வைத்துள்ளனர். அவற்றை கண்டுபிடித்து மீட்க அந்நாடுகளுடன் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கறுப்பு பண விவகாரத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம். அப்போது மட்டுமே அரசு இதில் வெற்றி பெற முடியும். வரி ஏய்ப்பை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்றார். 

வரி செலுத்துவோர் அதை எளிமையாக செலுத்த வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நாட்டில் 3.5 கோடி பேர் வரி செலுத்துகிறார்கள். 2011 - 12 ம் நிதியாண்டில் 92 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்தி உள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: