முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் காரணாமா?

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூலை.17 - மும்பையில் 3 இடங்களில் தொடர்குண்டுவெடிக்கச் செய்தது இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கமாக இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அந்த இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் குஜராத் மாநிலத்தில் ஒளிந்திருக்கலாம் என்று தெரிகிறது.

மும்பையில் கடந்த 13-ம் தேதி மாலையில் தாதர் பஸ்நிலையம், ஓபராய் ஹவுஸ் உள்பட 3 இடங்களில் தொடர் குண்டுவெடிக்கச் செய்ததில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு ஜெய்பூர், பெங்களூர், ஆமதாபாத் ஆகிய நகரங்களில் குண்டுவெடிக்க தீவிரவாதிகள் பின்பற்றிய முறைகளும் மும்பையில் கடந்த 13-ம் தேதி தொடர் குண்டுவெடிக்க தீவிரவாதிகள் பின்பற்றி முறைகளும் ஒன்றாக இருப்பதால் மும்பையிலும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதத்தை சேர்ந்த தீவிரவாதிகள்தான் குண்டுகளை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 47 பேர் போலீசாரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசாரும கருதுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள பல நகரங்களுக்கு இ-மெயில் மற்றும் சொல்போன் மூலம் தொடர்பு அடிக்கடி கொள்ளப்பட்டுள்ளது. அதையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளில் பலர் இன்னும் இந்தியாவில் தங்கி நாசவேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மும்பையில் தற்போது நடந்திருக்கும் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்க வேண்டும் என்று அகமதாபாத் நகரில் வெடித்த குண்டுவெடிப்பு சம்பவத்தை திறம்பட விசாரித்து குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடித்த மற்றொரு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் ரகசியமாக பதுங்கியிருக்கும் நவி மும்பை, தானே, புனே, நாசிக், ஒளரங்காபாத், சூரத், ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு மும்பை போலீசாரும் புலனாய்வு அதிகாரிகளும் சென்றுள்ளனர். இதுவரை நடந்துள்ள விசாரமை சரியான பாதையில் சென்று கொண்டியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐதராபாத், கேரளா, மத்தியப்பிரதேசம், கொல்கத்தா, ஆகிய இடங்களில் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதோடு உள்ளூர் ஆதரவு இருப்பதாக ஆமதாபாத் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவத்தை மும்பையில் ஒரு சில தீய சக்திகளின் உதவியுடன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மேலும் சிமி இயக்கத்துடன் தொடர்புடைய உள்ளூர்வாசிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள கல்யானில் உள்ள விருந்தினர் மாளிகை மேலாளர் ஒருவரிடம் நேற்றுமுன்தினம் போலீசாரும் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்