முக்கிய செய்திகள்

முதல்வர் முயற்சியால் மணல் - செங்கல் விலை சரிந்தது

Image Unavailable

கன்னியாகுமரி,ஜூலை.17 - முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு பலன் கிடைத்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மணல் விலை பாதியாக குறைந்தது. இதேபோல் செங்கல் விலையும் மேலும் ரூ.2 குறைந்துள்ளது. 

தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரசோ பெட்ரோல்,டீசல் விலையை பலமுறை உயர்த்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் தி.மு.க. இதனை கண்டுகொள்ளவும் இல்லை. எதிர்த்து போராட்டம் நடத்தவும் இல்லை. தி.மு.க. ஆட்சியில் செங்கல், மணல், கம்பி, ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களின் விலையும் கண்டபடி உயர்ந்தது. இதனால் கட்டுப்மான பணிகளே ஸ்தம்பித்து போயின. நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்ட முடியாமல் பாதியில் நிறுத்திக்கொண்டனர்.

இந்தநிலையில்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அவர் பதவிக்கு வந்த பிறகு மின்வெட்டு கணிசமாக குறைந்துவிட்டது. பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். அதில் ஒன்றுதான் செங்கல்,மணல் விலையை குறைப்பது. சில தினங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவை செங்கல், ஜல்லி உற்பத்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது விலையை குறைக்குமாறு முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்தி கேட்டுக்கொண்டார். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டு விலையை குறைப்பதாக வாக்களித்தனர். இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லாரி மணல் ரூ.28 ஆயிரமாக இருந்தது. இந்த விலை தற்போது ரூ.14 ஆயிரமாக குறைந்துவிட்டது. அதாவது மணல் விலை பாதியாக சரிந்துள்ளது. இதேபோல் செங்கல் விலையும் சரிந்துள்ளது. நேற்றுவரை ஒரு செங்கல் விலை ரூ.5.75 ஆக இருந்தது. தற்போது குமரி மாவட்டத்தில் ஒரு செங்கல் விலை ரூ.3.75 ஆக குறைந்துவிட்டது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கட்டுமான தொழிலும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதுகுறித்து கூறிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், முதல்வர் ஜெயலலிதா உற்பத்தியாளர்களுடன் பேசி விலையை குறைத்துள்ளார். இது மகிழ்ச்சி தருகிறது. வேலையும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: