முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமிகளை கற்பழிப்பதில் முதலிடம் வகிக்கும் மத்தியப்பிரதேச மாநிலம்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

போபால்,ஜூலை.-18 - நாட்டிலேயே சிறுமிகளை கற்பழிப்பதும் அவர்களுக்கு தீங்கு விளைப்பதிலும் மத்தியப்பிரதேச மாநிலம் முதலிடம் வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்தியா முன்னேறி வந்தாலும் பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்படுவதும் அவர்கள் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுவதும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து ஆய்வு ஒன்றை தேசிய குற்றவியல் பதிரு புலனாய்வு அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. இதில் நாட்டிலேயே மத்தியப்பிரதேச மாநிலத்தில்தான் சிறுவர்,சிறுமிகள், குறிப்பாக சிறுமிகள் அதிக அளவு கற்பழிக்கப்படுவதும் அவர்களுக்கு பல்வேறு பலாத்கார கிரிமனல் குற்றங்கள் இழைக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய கிரிமினல் பதவி புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 646 சிறுவர் சிறுமிகள் பல்வேறு கிரிமினல் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மத்தியப்பிரதேச மாநிலத்தின் பொருளாதார நகரான இந்தூரில் மட்டும் சிறுமிகள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக 337 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் மற்ற நகரங்களான ஜபல்பூர் மற்றும் போபாலில் முறையே 257 மற்றும் 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 1071 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 2009-ம் ஆண்டில் நாடு முழுவதும் நடந்த இந்த சிறுமிகள் கற்பழிப்பில் 20 சதவீதமாகும். அடுத்து இரண்டாவதாக உத்திரப்பிரதேசத்திலும் 3-வதாக மகாராஷ்டிராவிலும் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த மாநிலங்களில் முறையே 625,612 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 258 சிறுமிகளும்,மும்பையில் 85 சிறுமிகளும் போபால் நகரில் 77 சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. அதேசமயத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 363 சிறுவர், சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 181, மத்தியப்பிரதேசத்தில் 115 சிறுவர்,சிறுவர் சிறுமிகளும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்