முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடமாநிலங்களில் பலத்த மழை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.19 - மகாராஷ்டிரம் உள்பட வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கு பலர் பலியாகி உள்ளனர். நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பகுதி தென்மேற்கு பருவமழையால் பயன் அடைந்து வருகின்றன. இந்தாண்டு கடந்த ஜூன் 1-ம் தேதியே கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. தொடங்கி சுமார் ஒரு வாரம் நல்ல மழை பெய்தது. அதன் பின்னர் மாநிலத்தின் மத்திய பகுதியில் 40 நாட்களில் ஒரு சில நாட்கள் மட்டும் லேசான மழை பெய்தது. மற்றபடி மழை பெய்யவில்லை. தற்போது கேரளாவிலும் கடந்த வியாழக்கிழமையில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதேமாதிரி நாட்டின் வடகிழக்கு பகுதியின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரமபுத்திரா நதியில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் ஜம்மு-காஷ்மீர், இமாசலப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்காளம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம்,ஒரிசா, ஆந்திராவின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூரில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு மழைபெய்து வருகிறது. இதில் பலர் பலியாகிவிட்டனர். மும்பையிலும் கடந்த பல நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநகர தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிரவாதிகளை தேடுதல் வேட்டையிலும் தடங்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்