முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் இன்று துவங்குகிறது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 19 - சீனாவில் ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று கோ லாகலமாக துவங்க இருக்கிறது. கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்க இருக்கிறது. இது பற்றிய விபரம் வரு மாறு - சீனாவில் ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்குகிறது. 25 -ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இந்திய கராத்தே அணி பங்கேற்கிறது. 

அகில இந்திய கராத்தே சம்மேளனத் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்திய கராத்தே அணி சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு விமானம் மூலம் நேற்று புறப்பட்டது. 

சீனாவில் குவான்ஜால் என்ற இடத்தில் ஹஸ்சியா விளையாட்டு மை யத்தில் 10 - வது சீனியர் மற்றும் 11 - வது ஜூனியர் ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்குகிறது. 25 - ம் தேதி வரை இப் போட்டி நடைபெறுகிறது. 

அகில இந்திய கராத்தே சம்மேளனத் தலைவர் கராத்தே ஆர். தியாக ராஜன் தலைமையில் இந்திய கராத்தே அணி வீரர்கள் சீனாவிற்கு நே ற்று புறப்பட்டுச் சென்றனர். 

அகில இந்திய கராத்தே சம்மேளன பொதுச் செயலாளர் பரத்சர்மா அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வில்பி பி. கபாடியா (மராட்டியம்),சாயிபிரசாத் (தமிழ்நாடு) ஆகியோர் அணி பயிற்சியா ளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். 

பால் விக்ரமன் (தமிழ்நாடு), அணி மேலாளராகவும், லிக்கா தாரா (அருணாச்சல பிரதேசம்), அம்பேத்கர் குப்தா(ஜம்மு காஷ்மீர்) அணி அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். 

இவர்கள் அனைவரும் குழுத் தலைவரான கராத்தே ஆர்.தியாகராஜனு டன் சீனா புறப்பட்டுச் சென்று உள்ளனர். போட்டியில் பங்கேற்கும் இந்திய கராத்தே அணி வீரர்கள் பட்டியல் விபரம் வருமாறு - 

சுசில் கால்வின் (டெல்லி), கவுரவ் சிந்தியா (மத்திய பிரதேசம்), சபரி கார்த்திக் (தமிழ்நாடு),குணல்தே( மேற்கு வங்காளம்), சுனில் ரதி (அரி யானா), ஆம்பர் பரத்வாஜ் (சத்தீஸ்கர்), கட்டா பிரிவில், அணிகட் குப்தா (டெல்லி), கட்டா குழுவில் அமித் யாதவ், அஜய் யாதவ், நீம் கான் (மத்திய பிரதேசம்). 

பெண்கள் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் வருமாறு - வலேனா வாலண்டினா (ஒரிசா), சுப்ரியா ஜாதவ் ( மத்திய பிரதேச ம்),தீபாளி சர்வே (மராட்டியம்), கட்டா பிரிவில் வலேனா வாலண்டினா (ஒரிசா). 

வன்லால் தான்புயா (மிசோராம்), சாடேக் (அருணாச்சல பிரதேசம்), தருண் தாகர் (அரியானா), லிசால் சிங் (பஞ்சாப்), கட்டா பிரிவில் , சிவம் நாம்தேவ் (உத்தரப் பிரதேசம்), கட்டா குழுவில் , யாஷ் சக்சே னா, புபேஷ் சர்மா, சவுரியாபால் (மத்திய பிரதேசம்). 

யாமினி சிங் (உத்திரபிரதேசம்), யாடிராய் (அருணாச்சல பிரதேசம்), சனயா வி.கபாடியா(மராட்டியம்), கட்டா பிரிவில் யாமினி சிங் (உத்தரபிரதேசம்) ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago