முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து மோதும் 100-வது கிரிக்கெட் டெஸ்ட்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 20 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 100 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 21 -ம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவ ங்க இருக்கிறது. இதனையொட்டி முன்னாள் கேப்டன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் இங்கிலாந்தி ல் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒரே ஒரு டி - 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவை நடக்கிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21 -ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங் குகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது 2,000 - வது டெஸ்ட் போட்டியாகும். 

அதோடு இரு அணிகள் மோதும் 100 - வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இதனால் நாளை துவங்கும் இந்த டெஸ்ட் போட்டி வரலாற்றில் சிறப்பை பெறுகிறது.

100 - வது டெஸ்ட் போட்டியை ஒட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்தை ச் சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் சிலருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு அனுப்பி உள்ளது. 

ஆனால் யார் யாருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது என்ற விப ரத்தை வெளியிட மறுத்து விட்டது. 2,000 வது டெஸ்ட் போட்டி என்ப தால் மேலும் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. 

முதல் 90 ஆண்டுகளில் 1000 டெஸ்ட் போட்டி நடந்தது. அடுத்த 27 ஆண்டுகளில் 999 டெஸ்ட் போட்டி நடைபெற்று உள்ளது குறிப்பிடத் தக்கது. (குறுகிய காலத்தில் அதிக டெஸ்ட் போட்டி நடந்துள்ளது). 

2,000 - வது டெஸ்ட் போட்டியையொட்டி ஆன்லைன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சிறந்த வீரர்களை தேர்வு செய்தது. ரசிக ர்கள் மூலம் இந்தத் தேர்வு நடைபெற்றது. 

ரசிகர்கள் தேர்வு செய்த உலகின் சிறந்த டெஸ்ட் லெவனில் டெண்டுல் கர், கவாஸ்கர், சேவாக், கபில்தேவ் ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம் பெற்று  உள்ளது இந்தியாவுக்கு கிடைத்த கெளரவமாகும். 

அந்தக் கனவு அணியில் இடம் பெற்ற மற்ற வீரர்கள் விபரம் வருமாறு - பிராட்மேன் (ஆஸ்திரேலியா), லாரா (மே.இ.தீவு), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), வார்னே (ஆஸ்திரேலியா), வாசிம் அக்ரம் (பாகிஸ் தான்), அம்புரோஸ் (மே.இ.தீவு ), மற்றும் மெக்ராத் (ஆஸ்திரேலி யா) ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago