முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் இருந்து இந்தியர்கள் தொடர்ந்து வெளியேற்றம்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 2 - கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டில் இருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றி தாயகம் கொண்டுவருவதற்கான பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். 

லிபியா நாட்டில் அதிபர் கடாபியின் 30 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட அந்நாட்டு மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

 லிபியாவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இரு கட்டங்களில் இரு விமானங்கள் மூலமாக 528 இந்தியர்கள் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் இந்தியர்களை லிபியாவில் இருந்து கொண்டுவர விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறுகையில், லிபியாவில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு கொண்டுவரும் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன என்றார். 2 ம் தேதிக்குள் தாயகம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,500 ஆக உயரும் என்றும் அவர் கூறினார்.

 லிபியாவில் இருந்து இந்தியர்களை தாயகம் கொண்டுவருவதற்கு வர்த்தக விமானங்களும், வாடகை விமானங்களும், கப்பல்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் கிருஷ்ணா கூறினார். நேற்றுவரை நான்கு விமானங்கள் மூலம் நான்கு கட்டங்களாக 1083 இந்தியர்கள் தாயகம் கொண்டுவரப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!