முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்ரில் கட்டப்பட்டு வரும் இறைச்சி கூடத்தில் ஆய்வு

புதன்கிழமை, 20 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,ஜூலை 20 -  சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்ரில் ரூ.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சி கூடத்தையும், தற்போது இயங்கி வரும் இறைச்சி கூடத்தையும், தற்காலிகமாக மாறவுள்ள இறைச்சி கூடத்தையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி முனுசாமி நேற்று  பார்வையிட்டார். அமைச்சர் ரூ.48 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக்கூடத்தை பார்வையிட்டு, இக்கூடத்தில் உள்ள நிலுவை பணிகளான பதனிடும் அறை, எரு தயாரித்தல், ஆடுமாடுகள் தங்கும் வசதி, சுற்றுச்சுவர் மற்றும் இயந்திரம் இயங்குவதில் முடிவுறாத நிலுவைப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அடுத்ததாக தற்போது இயங்கி வரும் இறைச்சி கூடத்தையும் பார்வையிட்டு,  அங்குள்ள இறைச்சி அறுவைத் தொழிலாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். 

பின்பு 27,300 சதுர அடியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக மாற்று இறைச்சி கூடத்தையும் பார்வையிட்டு அமைச்சர் மாநகராட்சி அலுவலர்களிடம் தற்காலிக மாற்று இறைச்சி கூடத்தில் எஞ்சியுள்ள பணிகளை  விரைவில் நிறைவு செய்து,  இறைச்சி அறுவைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு முழுச் சுகாதாரமுறையில் இக்கூடம் செயல்பட வேண்டும் என்றார். அடுத்தப்படியாக அமைச்சர்  சென்னை மாநகராட்சி மூலம் செயல்பட்டு வரும் கட்டண கழிப்பிடமான சூளை, ராஜா முத்தைய்யா சாலையில் ( சைடன்ஹாம்ஸ் சாலை) உள்ள கட்டண கழிப்பறையை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நிர்ணயித்த கட்டணத்தொகை வசூலிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மாநகராட்சி மூலம் 470 இலவச கழிப்பிடங்கள், 180 கட்டண கழிப்பிடங்கள் இயங்கி வருகிறது. குடிசைப்பகுதியில் இலவசமாக கழிப்பிடங்கள் செயல்படுகிறதா என்பதையும், அதே போன்று வணிக வளாகங்கள் மற்றும் பிரதான சாலையில் உள்ள கழிப்பிடங்கள் கட்டண கழிப்பிடங்களாக செயல்படுகிறதா என்பதை மறு ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்நிகழ்ச்சியில்  ஆணையாளர் முனைவர் தா. கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்   வ.நீnullலகண்டன், துணை ஆணையர் (சுகாதாரம்)  எஸ்.மதுமதி, மற்றும் தலைமைப் பொறியாளர்கள்  பி. முருகேசன், கே. விஜயகுமார்,   மண்டல அலுவலர் கண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்