முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை - மே.இ.தீவுகள் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். - 2 -  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 215 ரன் வித்தியாசத்தி ல் வங்கதேச அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பேட்டிங்கின் போது, கெய்ல், ஸ்மித், பொலார் டு மற்றும் சர்வான் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர். ஆல்ரவுண்டர் டிவைன் பிரா வோ அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார். 

பின்பு பெளலிங்கின் போது, ரோச் வெகு நேர்த்தியாக பந்து வீசி 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார்.  இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். பென் அவருக்கு பக்கபலமாக பந்து வீசினார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13 -வது லீக் ஆட்டம் டெ ல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்ட மாக நடந்தது. இதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்தியத் தீவுக ள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 330 ரன் னைக் குவித்தது. அந்த அணி சார்பில் 3 வீரர்கள் அரை சதமும், 2 வீரர் கள் கால் சதமும் அடித்தனர். 

துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக, 110 பந்தில் 80 ரன்னை எடு த்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடங்கும். இறுதியில் அவர் டஸ்சாட்டே வீசிய பந்தில் கெர்வெஜீயிடம் கேட்ச் கொடுத்து வெளி யேறினார். 

அடுத்தபடியாக அதிரடி வீரர் பொலார்டு 27 பந்தில் 60 ரன்னை  எடுத் தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, துவக்க வீரர் ஸ்மித் 51 பந்தில் 53 ரன்னையும், சர்வான் 42 பந்தில் 49 ரன்னையும், டி. பிராவோ 38  பந்தில் 30 ரன்னையும் எடுத்தனர். 

நெதர்லாந்து அணி தரப்பில், சீலார் 45 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். முடாசர் புகாரி 65 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, வெஸ்ட்டிஜிக், டஸ்சாட்டே, மற்றும் லூட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

நெதர்லாந்து அணி 331 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை மே.இ.தீவுகள் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 31.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 115 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தப் போட்டியில் 215 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி அந்த அணிக்கு லீக் போட்டியில் முதலாவது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

நெதர்லாந்து அணி சார்பில், ஒரு வீரர் மட்டும் அரை சதத்தை எட்டி னார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். கூப்பர் 72 பந்தில் 55 ரன்னை எடுத்தார். அடுத்தபடியாக பின்வரிசை வீரரான முடாசர் புகாரி 42 பந்தில் 24 ரன்னை எடுத்தார். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ரோச் அபாரமாக பந்து வீசி 27 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார். இதில் ஒரு ஹாட்ரிக் சாதனையும் அடங்கும். அவருக்கு பக்கபலமாக பந்து வீசிய பென் 28 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, சம்மி 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரோச் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்