முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தலைமையில் கூட்டுறவு அச்சகங்களின் ஆய்வு கூட்டம்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.20 - தமிழக ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் .செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து கூட்டுறவு அச்சகங்களின் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் உள்ள 26 கூட்டுறவு அச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சரால் ஆய்வு செய்யப்பட்டது. 

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு அச்சகங்களில் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகள், அச்சகங்களை நவீனமயமாக்குதல், அச்சகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில் நுட்ப உத்திகள், கூட்டுறவு அச்சகங்களின் இலாபம் விவரம், கூட்டுறவு அச்சகங்களின் வணிக மேம்பாட்டிற்காக இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதிக அளவில் அச்சுப் பணிகள் மேற்கொள்ளவும், அனைத்து அச்சகங்களும் இலாபத்தில் இயங்கிட அனைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சரால் அறிவுரை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ப.அண்ணாமலை, மற்றும் கூடுதல் பதிவாளர்கள் ந.அசோகன், க.பு.பெ.பன்னீர்செல்வன், அ.சங்கரலிங்கம், இரா.ராஜேந்திரன், ம.ப.சிவன் அருள், கா.பிரமிளா, இணைப்பதிவாளர் மற்றும் கூட்டுறவு அச்சகங்களின் தனி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்