முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்கொய்தா புதிய தலைவரை கொல்ல முடிவு? பாக்.உறுதி

புதன்கிழமை, 20 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஜூலை.20 - சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்புக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அல் ஜவாஹிரியை கொல்ல அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக பாகிஸ்தான் உளவு பிரிவு தலைவர் ஜெனரல் அகமது உறுதியளித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு அளிக்கவிருந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்தது. 

இந்நிலையில் கடந்த அமெரிக்காவுக்கு திடீர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் சுஜா பாஷா, அல்கொய்தா அமைப்புக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அல் ஜவாஹிரியை கொல்ல அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தார். கடந்த மே மாதம் அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின் புதிய தலைவராக அல் ஜவாஹிரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர் இருக்கும் இடம் தெரியவில்லை. 

இந்நிலையில் இவர் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தால் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து ஜவாஹிரியை கொல்வோம் என்று சுஜாபாஷா தெரிவித்துள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு அய்மன் அல் ஜவாஹிரியும், பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் தலைவர் பைதுல்லா மெஹ்சூத்தும் சந்தித்து பேசிய விஷயம் பாகிஸ்தானின் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ.க்கு தெரியும் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்