முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுராவில் கம்யூ. தலைவர்கள் உள்பட 8 பேர் கடத்தல்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

அகர்தலா,ஜூலை.21 - திரிபுரா மாநிலத்தில் இடது கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்பட மலைசாதியினர் 8 பேர்களை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். கடத்தல்காரர்களை பிடிக்க தீவிரவேட்டை நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாம்,நாகலாந்து, திரிபுரா, மேகாலயா உள்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாதிகளும் கிளர்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகிறார்கள். அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதேமாதிரி நாகலாந்தில் நாகா தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இடது கம்யூனிஸ்ட் ஆட்சி இருக்கும் திரிபுரா மாநிலத்தில் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் நாசவேலை மற்றும் கடத்தல், கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 

திரிபுராவின் வடக்கு பகுதியில் தலாய் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் தொலைதூர பகுதியில் தேபேந்திரா கரிபரிபாரா என்ற பகுதியில் இடது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 தலைவர்கள் உள்பட மலைசாதியினர் 8 பேர்களை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றுவிட்டனர். கடத்தப்பட்டவர்களை தேடிப்பிடிக்கும் பணியில் அசாம் ரைபிள் பிரிவு அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் வங்கதேச எல்லையையொட்டி பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 18-ம் தேதி இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கரபரிபாரா என்ற கிராமத்திற்குள் புகுந்து இடது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருண் சக்மா (35) மற்றும் கஞ்ச சக்மா ஆகிய இரண்டு உள்ளூர் தலைவர்கள் மற்றும் மலைசாதியினர் சக்மா,ரதன்ஜாய் ஆகிய 4 பேர்களையும் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுவிட்டனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் திரும்பி செல்லும்போது மேலும் 4 தீவிரவாதிகளை கடத்தி சென்றுவிட்டனர். கடந்த ஓராண்டில் திரிபுரா மாநிலத்தில் 3-வது முறையாக கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!