முக்கிய செய்திகள்

ஏர் இந்திய விமான டயர் வெடிப்பு: தப்பிய பயணிகள்

Image Unavailable

கான்பூர்,ஜூலை.21 - ஏர் இந்திய விமான கம்பெனிக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று தரை இறங்கியபோது டயர் வெடித்ததில் ஓடு பாதையை விட்டு விமானம் விலகி சென்றது. பயணிகள் யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். டெல்லிக்கும் கல்கத்தாவுக்கும் இடையே ஏர் இந்திய விமான சர்வீஸ் கடந்த மாதம் துவக்கப்பட்டது. இந்த விமானம் நேற்று டெல்லியில் இருந்து கான்பூர் வழியாக 54 பயணிகளுடன் கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டியிருந்தபோது அவரசம் அவசரமாக கான்பூரில் உள்ள இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சக்கெரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானமானது தரையிறங்கியவுடன் அதனின் ஒரு டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் விமானம் குலுங்கியதோடு விமான ஓடு பாதையை விட்டு விலகி சென்றது. அதன் சக்கரங்கள் முழுவதும் பூமிக்குள் புதைந்துவிட்டது. விமானம் குலுங்கினாலும் பயணிகள் யாருக்கும் காயம் கூட ஏற்படவில்லை. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. விமானத்தை மீட்கும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு கான்பூர் மற்றும் லக்னோ நகரங்களுக்கு அனுப்பப்பட்டனர். விமானத்தில் பயணம் செய்த 52 பேர் கான்பூருக்கும் 2 பேர் லக்னோவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பினோம் கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று எழுத்தாளர் சேடன் பகத் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: