முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் 6 தீவிரவாதிகள் குண்டு வைத்ததாக தகவல்கள்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை.21 - மும்பை தொடர் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் குண்டு வைத்ததாக விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் கடந்த வாரம் 3 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மும்பை தீவிரவாத தடுப்பு போலீசாரும், தேசிய புலனாய்வு துறையினரும் சேர்ந்து இந்த சதியில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடுகிறார்கள். பல்வேறு மாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று சந்தேகப்படும் நபர்களிடம் விசாரிக்கிறார்கள். குஜராத்தில் கைதான 3 தீவிரவாதிகளை மும்பைக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது. அதன்படி மும்பையில் குண்டு வைத்தது 6 பேர் என்றும் இவர்கள் புதிதாக தீவிரவாதிகளாக மாழியவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்கள் தான் மும்பையில் 3 இடங்களை தேர்வு செய்து குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். குண்டு வெடிப்புக்கு முன்பு இவர்களுக்கும் மேற்கு வங்காளம் மற்றும் குஜராத்தை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருந்தது. எனவே 6 தீவிரவாதிகளும் இந்த இரு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் மும்பையில் குண்டு வைத்தது 6 பேர் என்பது தெரியவந்தது. இவர்களுக்கும் குஜராத் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க நாடுமுழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

மும்பையில் நேற்று முன்தினம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குண்டு வெடித்தபோது அங்கு இருந்தவர்கள் தெரிவித்த தகவல்களின் பேரிலும், ரகசிய கேமிராவின் அடிப்படையிலும் சந்தேக நபர்களை கம்ப்யூட்டரில் படம் வரைந்து தேடுகிறார்கள். போலீசுக்கு உளவு சொல்பவர்களும் பயனுள்ள தகவலை தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் டாங்க் மாவட்டத்தில்  உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து தீவரவாத தடுப்பு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அதனடிப்படையிலும் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இதற்கிடையே தொடர்குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அசோக் பட்டா(45) என்பவர் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்