முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லார்ட்ஸ், ஜூலை. 21 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் கிரி க்கெட் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்க இரு க்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று ப் பயணம் செய்து கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அந்த அணிக் கு எதிராக விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒரே ஒரு டி - 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவை நடக்க இருக்கிறது.

இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் பல வகையில் சிறப்பு வாய்ந்ததாகும். 

கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றைப் பொறுத்தவரை இந்த டெஸ்ட் 2000 - வது டெஸ்ட் போட்டியாகும். தவிர, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 100 -வது டெஸ்டாகும். 

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே சமீபத்தில் 3போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

எனவே இந்திய அணி முழு நம்பிக்கையுடன் இந்தத் தொடரில் களம் இறங்குகிறது. அதே நேரம் மே.இ.தீவு அணியை விட, இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாகும். தவிர, சொந்த மண்ணில் அந்த அணி விளையாடுவது கூடுதல் பலமாகும். 

கடந்த முறை விளையாடிய அணியைவிட தற்போதைய இங்கிலாந்து அணி பலம் வாய்ந்தது. 2007 -ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் 1 - 0 (3 டெஸ்ட்) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. 

சோமர்செட் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சிற ப்பாக விளையாடவில்லை. ரெய்னா மட்டுமே நன்றாக விளையாடி சதம் அடித்தார். இதனால் அவர் யுவராஜ் சிங்கை ஓரம் கட்டி விட்டு 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுகிறார். 

மே.இ.தீவு தொடரில் விளையாடாத டெண்டுல்கர், காம்பீர், ஜாஹிர் கான், ஸ்ரீசாந்த், யுவராஜ் சிங் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். இது இந்திய அணிக்கு புத்துணர்வை அளிக்கும். 

காம்பீருடன் தமிழக வீரர் அபினவ் முகுந்த் தொடக்க வீரராக களம் இறங்குகிறார். அதற்கு அடுத்த பேட்டிங் வரிசையில், டிராவிட், டெண்டுல்கர், வி.வி.எஸ். லக்ஷ்மண், ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோர் உள்ளனர். 

3 வேகப் பந்து வீரர்களும், ஒரு சுழற் பந்து வீரரும் இடம் பெறுவார்க ள். சுழற் பந்தில் முன்னணி வீரர் ஹர்பஜன் சிங் இடம் பெறுவார். வே கப் பந்து வீரர்கள் ஜாஹிர்கான், இஷாந்த் சர்மா இடம் பெறுவார்கள். 

பிரவீன் குமார், முனாப் படேல், ஸ்ரீசாந்த் ஆகிய 3 பேரில் ஒருவர் இட ம் பெறுவார். இதில் பிரவீன் குமார் இடம் பெறவே அதிக வாய்ப்பு உள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பொறுத்தே இந்திய அணியின் நிலை உள்ளது. 

இங்கிலாந்து அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.பேட்டிங்கில் கேப்டன் ஸ்ட்ராஸ் , அலிஸ்டார் குக், இயான்பெல், பீர்டர்சன், ஜோனாதன் டிராட், பிரையர் ஆகியோரும், பந்து வீச்சில் ஆண்டர்சன், டிரெம்லட், சுவான், பிரஸ்னன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் உள்ளனர். 

வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் டெலி விசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்