உலக கோப்பை - கனடா- பாகிஸ்தான் இன்று மோதல்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
Canada-Pak

கொழும்பு, மார்ச்.3 - 10 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்க தேசம் ஆகிய 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 13 வது நாளான இன்று கொழும்பில் கனடா -பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஏ.பிரிவில் உள்ள கனடா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே பாகிஸ்தான் அணி கென்யாவையும் இலங்கையையும் தோற்கடித்துள்ளது. கனடா அணி இலங்கையிடமும், ஜிப்பாப்வேயுடனும் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பலவீனமான கனடா அணியை தோற்கடித்து 3வது வெற்றியை பெற வாய்ப்புள்ளது. ஆனால் அடிபட்ட பாம்பாக கனடா சீறினால் பாகிஸ்தான் அணி தோல்வி அடையவும் நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: