முக்கிய செய்திகள்

நடிகர் ரவிச்சந்திரன் உடல்நிலை கவலைக்கிடம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.22 - நடிகர் ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.`காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் ரவிச்சந்திரன். இவருக்கு வயது 70. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ரவிச்சந்திரன் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஒரு மாத காலமாக ஏற்பட்ட சிறுநீரகக் கோளாறு காரணமாக மயிலாப்பூரில் உள்ள தேவகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். நடிகர் ரவிச்சந்திரனுக்கு மனைவி விமலாவும், பாலாஜி, அம்சவர்த்தன் என்ற மகன்களும் லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: