முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் ஏராளமான தங்க நகைகள்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

நகரி, ஜூலை 22 - சாய்பாபாவின் புட்டபர்த்தி ஆசிரமத்தில் 59 கோடி அளவுக்கு தங்கம் வெள்ளி கிடைத்தது. இதேபோல் பெங்களூர் பிருந்தாவன் ஆசிரமத்திலும் ஏராளமான அளவில் தங்கம், வெள்ளி, மற்றும் ரொக்கம் கிடைத்துள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீகப்பணி மற்றும் சமூகப் பணிகளை செய்துவந்தவர் ஸ்ரீசத்ய சாய்பாபா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி மரணமடைந்தார்.  அவர் தங்கியிருந்த புட்டபர்த்தி ஆசிரமத்தில் உள்ள அறைகளில் ரூ. 59 கோடி அளவுக்கு தங்கம், வெள்ளி மற்றும் கோடிக்கணக்கில் ரொக்கப்பணம் இருந்தது. அதை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் டெபாசிட் செய்ததோடு அதற்குரிய வருமான வரி ரூ. 4.81 கோடியையும் கட்டினர். இதேபோல் பெங்களூர் புறநகர் பகுதியான ஒயிட்பீல்டில் சாய்பாபாவுக்கு சொந்தமான பிருந்தாவனம் என்ற ஆசிரமம் உள்ளது. இங்குள்ள சாய்பாபாவின் அறை பெங்களூர் உயர் போலீஸ் அதிகாரி ஹர்சா, சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் ஸ்ரீநிவாசன், ரத்னாகர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அந்த அறையில் இருந்து ரொக்கமாக ரூ. 80 லட்சத்து 50 ஆயிரத்து 500ம் தங்கம் 6.09 கிலோவும், 255 கிலோ வெள்ளிப் பொருட்களும் கிடைத்தன. அவற்றை சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் பெங்களூரில் உள்ள கனரா வங்கியில் டெபாசிட் செய்தனர். அதற்கான வருமான வரியும் கணக்கிட்டு பின்னர் கட்டுவதாக கூறினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்