முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பா ராஜினாமா செய்ய இ.கம்யூ கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.22 - சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று இடது கம்யூனிஸ்ட் வற்புறுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க தொழில் தலைவிரித்தாடுகிறது. மாநிலத்தில் 52 சட்ட விரோத சுரங்க நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் இவைகளில் இருந்து முதல்வர் எடியூரப்பா லஞ்சம் ஏற்பட்டதாகவும் லோக் அயுக்தா விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கோரியுள்ளார். 

புதுடெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த யெச்சூரிடத்தில் கர்நாடகத்தில் சுரங்க ஊழல் குறித்து கேட்டதற்கு மேற்கண்டவாறு பதில் அளித்தார். கர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழல் நடக்கிறது என்று நாங்கள் ஏற்கனவே பல முறை கூறியுள்ளோம். சுரங்க ஊழலில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடியூரப்பாவில் மாநில அரசுக்கு சுமார் ஆயிரத்து 850 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று லோக் அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவே தனது விசாரணையில் அறிக்கையில் கூறியுள்ளார். அதனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முதல்வர் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்றும் யெச்சூரி மீண்டும் வற்புறுத்தி கூறினார். 

எடியூரப்பா மீது பாரதிய ஜனதா நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊழல் விஷயத்தில் அந்த கட்சி சமாதானம் செய்துகொண்டதாக அர்த்தமாகிவிடும் என்றும் யெச்சூரி மேலும் கூறினார். 

சுரங்க ஊழலில் ஈடுபட்டுள்ள எடியூரப்பா, முதல்வர் பதவியில் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது. சுரங்க ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு சம்மதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்