முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி கற்பழிப்பு வழக்கு: முதல்வர் உம்மன்சாண்டி பேட்டி

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.22 - கேரள மாணவி கற்பழிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். 

கேரள மாநிலம் பரவூரை சேர்ந்த மாணவி கற்பழிப்பு வழக்கில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தை சேர்ந்த பெருமாள் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. பழனியை சேர்ந்த இவர் கேரளாவில் வியாபாரம் செய்து வந்த போது புரோக்கர்கள் மூலம் மாணவியை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். 

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் மொத்தம் 130 பேருக்கு தொடர்பு இருப்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அனைவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இதற்கிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தப்ப முயற்சி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து  வந்த எஸ்.பி. சுரேந்திரன் சினிமா பிரபலங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து அவர் தனிப்படையில் இருந்து மாற்றப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் எழுந்துள்ள புகாருக்கு முதல்வர் உம்மன்சாண்டி பதில் அளித்து கூறியதாவது, 

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்துள்ளது. அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, சிகிச்சை முறைகளை கண்காணிக்க எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதில் பாதி பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இநத் வழக்கில் தொடர்புடைய ஒரு குற்றவாளியையும் தப்ப விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்