முக்கிய செய்திகள்

வித்தியாசமான திரைப்படங்கள் எப்போதுமே வெற்றி பெற்றிருக்கின்றன

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

மதுரை,ஜூலை.22 - வித்தியாசமான திரைப்படங்கள் எப்போதுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்று மதுரையில் நடிகர் விக்ரம் நிருபர்களிடம் தெரிவித்தார். இயக்குனர் விஜய் இயக்கி நடிகர் விக்ரம் நடித்துள்ள வெளிவந்துள்ள தெய்வத்திருமகன் படத்தின் இடைவேளைகளில் தியேட்டர்களில் ரசிகர் முன்னிலையில் நடிகர் விக்ரம் நேரில் தோன்றி வருகிறார்.  நடிகர் விக்ரம் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இயக்குனர் விஜய்யின் இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் 25க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த குடும்பபடம்.  ஆனால் கல்லூரி மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் திரும்ப, திரும்ப வந்து பார்க்கிறார்கள். பெண்கள் உள்ளே சென்று பார்க்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இது ஒரு வித்தியாசமான கதை. 16 வயதிலிருந்து இதுவரை வித்தியாசமான படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்து இருக்கின்றன.

    இயக்குனர் விஜய்யின் தீவிர உழைப்பு என்னை இந்த படத்தில் வரும் கிருஷ்ணாவாகவே மாற்றி விட்டது. ஒரு தந்தையும், மகளும் எவ்வாறு பாசமாக இருக்க வேண்டும் என்பதை இந்த படம் எடுத்துக்காட்டுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளை மதிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது. இந்த படத்தில் நடிந்த அனைத்து நடிகர், நடிகர்களுமே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். குறிப்பாக சந்தானத்தின் காமடி இல்லாத குணச்சித்திர வேடம் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணையாக இருந்துள்ளது என்றார். படத்தின் இயக்குனர் விஜய் கூறும் போது, இந்த படத்தை எடுக்கும் போது இது கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நினைத்தோம். அதன் படி வெற்றியும் பெற்று விட்டது. இதற்கு காரணம் நடிகர் விக்ரமின் இயற்கையான நடிப்புதான். மேலும் திருட்டு விசிடி குறித்து போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் அளித்துள்ளோம். அவர்கள் தீவிர நடவடிககை எடுத்து வருகிறார்கள். மதுரை போலீசாருக்கு எங்களது நன்றியை தெரிவித்துள்கொள்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: