முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணிப் பொருட்களுக்கு 5 சதவீத வாட் வரி ரத்து

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.22 - முந்தைய தி.மு.க. அரசு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான கடன் சுமையை எனது தலைமையிலான அரசு மீது சுமத்தி விட்டு சென்ற நிலையிலும், மக்கள் நலனுக்காக பல புதிய நலத் திட்டங்களை எனது அரசு கொண்டு வந்துள்ள நிலையிலும், ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களை பாதிக்காத வகையில், தமிழக அரசால் விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி 12.7.2011 முதல் சிறிதளவு உயர்த்தப்பட்டது.  தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம், 2006​ல் அட்டவணை ஐய, பகுதி அ , வரிசை எண். 3 முதல் 10 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள துணி மற்றும் துணிப் பொருட்கள் மீது 5 சதவீதம் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டது. 

 சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தேவைக் குறைவு காரணமாக ஜவுளி ஏற்றுமதியில் நிலவும் மந்தமான நிலையால் துணிகள் மற்றும் இழைகள் அதிக அளவில் தேக்கமடைந்து உள்ளதாகவும், இதன் காரணமாக ஜவுளித் துறை பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறதென்றும், இத்தருணத்தில் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் நாட்டில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்ற மாநில உற்பத்தியாளர்களுடன் போட்டியிட இயலாது என்றும், எனவே துணி மற்றும் துணிப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 5 சதவீதம் மதிப்புக் கூட்டு வரியை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன.

தற்போது ஜவுளித் தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, இதுபற்றி இன்று எனது தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம், 2006​ல் அட்டவணை ஐய, பகுதி அ, வரிசை எண். 3 முதல் 10 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள துணி மற்றும் துணிப் பொருட்கள் மீதான 5 சதவீதம் மதிப்புக் கூட்டு வரியை 12.7.2011 முதல் முன்தேதியிட்டு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எனது தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் துணி மற்றும் துணிப் பொருட்கள் வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற்ற இனங்களாக விளங்கும்.  இதன் மூலம் தமிழ் நாட்டின் ஜவுளித் தொழிலுக்கு நிவாரணம் கிடைப்பதுடன், இந்தத் தொழில் பெருகவும் வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்