முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரஹார் ஏவுகணை சோதனை வெற்றி

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பாலசோர்,ஜூலை.22 - இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட பிரஹார் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. இது குறுகியதூர ஏவுகணையாகும். அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இந்தியாவை சீர்குலைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதை தடுக்கும் வகையிலும் நாட்டின் இறையாண்மையை கட்டிக்காக்கும் வகையிலும் நமது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி பிருத்வி, பிரமாஸ், அக்னி போன்ற ஏவுகணைகளை இந்தியா தயாரித்து  சோதனை நடத்தி வருகிறது. இந்த ஏவுகணைகளை நம் வசதிக்கு தகுந்தாற்போல் பயன்படுத்த முடியாது. மேலும் மோட்டார் வாகனங்களில் அதை வைத்து தரைப்பாதையில் கொண்டு செல்ல முடியாது. 

இதையெல்லாம் கருத்தில் கொண்டு புதிய தொழில்நுட்பத்துடனான பிரஹார் ஏவுகணையை இந்திய ராணுவ ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து நேற்று வெற்றிகரமாக சோதித்து உள்ளனர். 

ஒரிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் அருகே சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சண்டிபூர்  ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை நேற்று காலை சரியாக 8.15 மணிக்கு ஏவப்பட்டது. ஏவுகணையை ஏவும்போது ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளும் சோதனை நிலைய அதிகாரிகளும் உடன் இருந்தனர். 

பிரஹார் ஏவுகணை என்றால் தாக்குதல் என்று அர்த்தமாகும். சுமார் 150 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள எதிரிகளின் இலக்குகளை நோக்கி குறிதவறாமல் தாக்கி அழிக்க வல்லது. பினாகா, ஸ்மெர்ச், பிருதிவி-2 ஆகிய ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டில் உள்ளன. இவைகளை ராக்கெட் உதவியுடன்தான் ஏவமுடியும். பிரஹார் ஏவுகணையை ராக்கெட் உதவி இல்லாமல் ஏவமுடியும். வெவ்வேறு இலக்குகளை ஒரு நேரத்தில் தாக்கி அழிக்க முடியும். பிரஹார் ஏவுகணையில் 6 ஏவுகணைகளை பொருத்த முடியும். மேலும் எல்லா ஏவுகணைகளையும் ஒரே ஏவுதளத்தில் வைத்து ஒரே நேரத்தில் வெவ்வேறு திசையில் செலுத்த முடியும். மேலும் இதை ஏவுதளத்திற்கு லாரியில் வைத்து கொண்டு செல்ல முடியும். ஏவுகணைகள் ஒரே மேடையில் இருந்து ஏவப்பட்டதும் அடுத்த தொகுதியை வாகனத்தில் இருந்து இது தானே எடுத்து நிரப்பிக்கொள்ளும். இதனால் ஏவுகணைகளை தொடர்ந்து ஏவலாம். பிரஹார் ஏவுகணைகளை உள்நாட்டில் கிடைக்கும் கருவிகளை கொண்டே தயாரிக்க முடியும். தொழில்நுட்பமும் கருவிகளும் நம்முடையதாக இருப்பதால் குறைந்த செலவில் பிரஹார் ஏவுகணையை தயாரிக்க முடியும். காடு,மலை,சதுப்பு நிலம் ஆகிய பகுதிகளிலும் இதை எடுத்துச் சென்று பொருத்திக்கொள்ள முடியும். ராணுவ தரைப்படைக்கும் விமான படைக்கும் இது பயன்படும். பிரஹார் ஏவுகணை சோதனையையொட்டி அந்த பகுதியில் உள்ள கிராமப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தினப்படியும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago