முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடியூரப்பா மீது நடவடிக்கை: பரத்வாஜ்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர்,ஜூலை.23 - சுரங்க ஊழலில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடியூரப்பா மீது சட்டப்பூர்வமான முறையில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில கவர்னர் பரத்வாஜ் சூசகமாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஏராளமான சட்டவிரோத சுரங்க நிறுவனங்கள் உள்ளன. இவைகளில் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் பணம் பெற்றுள்ளதாக லோக்ஆயுக்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான இந்த லோக் ஆயுக்த், சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில் முதல்வர் பஙகாரப்பா, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஜனார்த்தன ரெட்டி சகோதர்கள், ஸ்ரீராமுலு, முன்னாள் முதல்வர் குமாரசாமி, மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் பங்காரப்பா மட்டும் 55 நிறுவனங்களில் லஞ்சப்பணம் பெற்றிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்களால் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2010-ம் ஆண்டு மே மாதம் முடிய அரசுக்கு வருவாய் இழப்பு ரூ.ஆயிரத்து 850 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனையொட்டி முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று இடது கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து பாரதிய ஜனதா கருத்து தெரிவிக்கையில் அறிக்கை முழுமையாக கையில் கிடைத்த பிறகுதான் எதையும் கூறமுடியும் என்று கூறியுள்ளது. 

இதற்கிடையில் கர்நாடக கவர்னர் பரத்வாஜ் நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்தார். லோக் ஆயுக்தா அறிக்கை வந்த பின்னர் அதன் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அறிக்கையில் எடியூரப்பா மீது குற்றம்சுமத்தப்பட்டிருப்பதால் அவர் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே முதல்வர் எடியூரப்பாவுக்கும் கவர்னர் பரத்வாஜுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில் வாயிக்கு அவுல் கிடைத்த மாதிரி லோக் ஆயுக்தா அறிக்கை பரத்வாஜூக்கு கிடைத்துள்ளது. முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற தலைவர் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி மீதும் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நான் அரசியல் சட்டப்பூர்வ உயர்ந்த பதவியில் இருப்பதால் பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளை வைத்து பதில் எதுவும் கூறக்கூடாது என்று நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் பரத்வாஜ் கூறினார். அதேசமயத்தில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவை பரத்வாஜ் புகழ்ந்தார். அறிக்கையில் அவர் கூறியிருப்பது சரியாகத்தான் இருக்கும் என்றார். அறிக்கையில் சந்தேகப்படுவதற்கு எதுவும் இருக்காது என்றார். எனக்கு அறிக்கை வந்தவுடன் அதை நன்றாக படித்து ஆராய்ந்த பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுப்பேன் என்றும் பரத்வாஜ் கூறினார். முதல்வர் எடியூரப்பா மற்றும் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு நான் நடவடிக்கை எடுக்கும்போது உங்களுக்கு தெரியவரும் என்று பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்