முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபரில் எகிப்தில் தேர்தல்?

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ,ஜூலை.23 - வரும் அக்டோபர் மாதத்தில் எகிப்து பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு ராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்தலில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் மேலவை, மக்களவை ஆகியவற்றுக்கான தேர்தல் ஏற்பாடுகள் செப்டம்பரில் முடிந்து விடும். 30 நாட்களுக்கு பிறகு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்று அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நாள்கள் செப்டம்பர் 18 ம் தேதி அறிவிக்கப்படும் என்று ராணுவ ஆட்சி குழு உறுப்பினரான ஜெனரல் மம்டோ ஷகீன் தெரிவித்துள்ளார். 

எகிப்தின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தேர்தலை கண்காணிப்பதற்கு யாரையும் அனுமதிக்க போவதில்லை என்று மேலும் அவர் தெரிவித்தார். இதற்கு ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் வெளிப்படையாக நடப்பதை இது சந்தேகத்திற்கு இடமாக்கி உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்