முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வெளிநாடு செல்ல அனுமதி

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.23 - பிரபல இந்தி நடிகர் சஞ்சத் தத் வெளிநாடு சென்றுவர சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடித்தனர். இதுதொடர்பான வழக்கில் சஞ்சய் தத்தும் சேர்க்கப்பட்டார். இவருக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பு இல்லை என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால் லைசென்ஸ் இல்லாமல் வீட்டில் இயந்திர துப்பாக்கி வைத்திருந்ததற்காக இவர் குற்றவாளி என்று மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதில் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து சஞ்சய் தத் அப்பீல் செய்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெளிநாடுகளில் எடுக்கப்பட உள்ளது. அதனால் வருகின்ற 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வெளிநாடு செல்ல தமக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான இறுதி விசாரணை நேற்று நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ். செளகான் ஆகியோர் கொண்ட பெஞ்சில் நடைபெற்றது. அப்போது வருகின்ற ஜனவரி 10-ம் தேதி வரை வெளிநாடு சென்றுவர சஞ்சய் தத்திற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினார். ஆனால் வெளிநாடு திரும்பியதும் ஒருவார காலத்திற்குள் பாஸ்போர்ட்டை கொடுத்தவிட வேண்டும் என்றும் சஞ்சத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!