முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.,க்கு எதிரான தொடர்: தில்ஷான் கேப்டனாக நியமனம்

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. 23 - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கும் இலங் கை கிரிக்கெட் அணிக்கு தில்ஷான் மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கிரிக். வாரியம் நேற்று இதனை அறிவித்தது. அடுத்த மாதம் (ஆகஸ்ட்), ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையி ல் சுற்றுப் பயணம் செய்து இலங்கை அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடு கிறது. 

இதில் ஒரு நாள் போட்டிக்கான 20 பேர் கொண்ட இலங்கை அணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பட்டிய லில் கேப்டன் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், இலங்கை அணியின் கேப்டனாக தில்ஷான் மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் தில்ஷான் தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. 

அங்கு ஒரு நாள் தொடரையும், டெஸ்ட் தொடரையும் இலங்கை இழந்தது. இந்தத் தோல்வி காரணமாக தில்ஷான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு கேப்டனாக தில்ஷான் நிய மிக்கப்பட்டு இருக்கிறார். இதை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 

20 பேர் கொண்ட இலங்கை அணி விவரம் வருமாறு - தில்ஷான் (கே ப்டன்), ஜெயவர்த்தனே, சங்கக்கரா, மேத்யூஸ், கபுகேந்திரா, ஜிவன் மென்டிஸ், சமரசில்வா, சண்டிமால், கருணாரத்தே, திகாரா பெரே ரா, மலிங்கா, டக்பல் டபிங்கா பிரசாத், குலசேகரா, உதனா, ரன்தீவ், அஜந்தா மென்டிஸ், ஹெராத், பண்டாரா, செரநாயகே இவர்களில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago