முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகிற சட்டமன்ற தேர்தல் தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி - நயினார்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஆத்தூர் மார்ச்.3 - தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி அடிப்போம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற சபதம் எடுப்போம் என ஆத்தூரில் தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாநில அ.தி.மு.க அம்மாபேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக பேசினார்.

தி.மு.க அரசை கண்டித்தும் ஊழலில் சிக்கிய தி.மு.க தலைவர் கருணாநிதி  அவரது குடும்பத்தினரையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் ஏற்காடு, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டிணம், பெத்தநாயக்கன்பாளையம், பேளூர் பேரூராட்சி ஆகிய ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள அவலநிலையினை கண்டித்தும் வாழப்பாடி ஒனறியம், சிங்கிபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் சிமெண்ட் ஆலையினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சீர்கேட்டை கண்டித்தும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்தும் சாலை வசதி, சீர்கேடு, சுகாதாரசீர்கேடு, ஆகியவைகளை கண்டித்தும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவி வரும் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு ,மின்தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு இவைகளை சீர் செய்யாத தி.மு.க அரசை கண்டித்தம் ஆத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

கண்டன ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாநில புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.

ஆத்தூர் நகர கழக செயலாளர் மோகன் வரவேற்றார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வம், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அம்மாபேரவை செயலாளர்  ஆர். இளங்கோவன், தலைமை கழக பேச்சாளர் ஜெயகோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.

முன்னாள் அமைச்சர் மாநில புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தி.மு.க அரசை கண்டித்து பேசியதாவது

தி.மு.க அரசு செத்துவிட்டது. இனி பாரப்பட்டி சுரேஷ், வீரபாண்டியார் சொல்வது போலீஸ் கேட்ககூடாது. சேலம் மாவட்டத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் உள்ளனரா? காவல்துறையினர் வெட்கப்படவேண்டும். காவல்துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற  இன்ஸ்பெக்டர் குப்புராஜ் சொத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். 

13 வயது சிறுமி பச்சிளம்குழந்தை என்ன பாவம் செய்தது 6 பேரை குடும்பத்தோடு வெட்டி சாய்த்து விட்டனர். 6 பேரை கொலை செய்தவருக்கு தி.மு.க அரசு ஆதரவு காவல்துறை ஆதரவு, உயர் பதவியில் உள்ள காவல் காவல்துறை அதிகாரிகள் ஆதரவு கொடுத்துள்ளனர். 

6 பேரை கொலை செய்த் குற்றவாளி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ் குமாரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது மாநில வேளாண்மை துஹை அமைச்சர் வீரபாண்டியார் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று விசாரித்துவிட்டு  வருகிறார். இது என்ன நியாயம்?

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதி வாக்காளர்களுக்கும் தட்டி கேட்கும் கடமை தைரியம், ஜனநாயக உரிமை அ.தி.மு.க கட்சி தொண்டனுக்கு மட்டுமே உண்டு வேறு எந்த கட்சி தொண்டனுக்கும் இந்த  தைரியம் கிடையாது.

என்னை உட்பட நானே சிறுதவறு செய்தாலும் பதிவியில் நிடிக்க முடியாது. அம்மா நடவடிககை எடுத்து விடுவார். கட்டுப்பாடான கட்சி அ.தி.மு.க கட்சி ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்,  ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டதே அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீரபாண்டியார் அமைச்சர் ஆனால் சேலம் மாவட்டத்தில் இன்னும் எத்தனை பேர் படுகொலை  செய்யப்படுவார்கள் என்பது தெரியாது,

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது சட்ட ஒழுங்கு பலசரக்கு கடையில் 10 ரூபாய்க்கு கேட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்காடு ஒன்றியத்தில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்கப்படவில்லை. பள்ளி மாணவ மாணவியருக்கு சாதிசான்றிதழ் கிடைக்காமல் உயர் கல்வி பெற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். 

ஏற்காடு ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி ஆகிய பகுதியில் உள்ள தாலூக்கா அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சாதி சான்றிதழ் வழங்காமல் மலைவாழ் மக்களை தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிப்பது ஏன்? தாலுக்கா ஆபிஸ்கள் செயல்படுகிறதா? இல்லையா? 

ஆத்தூருக்கு துணை முதல்வர் ஸ்டாலின் வந்தபோது சேலத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து வீரபாண்டியாரை சந்தித்தார். அப்போது சேலத்திற்கு நேர் வழியில் வராமல் ராசிபுரம் வழியாக சேலம் சென்று பார்த்தார்.  சாலை சீர்கேட்டால் மிகவும் மோசமாக இருந்ததால் அவர் வேறுவழியாக சேலம் சென்று பார்த்தார். சாலை மோசமாக இருப்பதால் பல்வேறு விபத்து ஏற்பட்டு வருகிறது. தினம் தோறும் பல விபத்து, உயிர்பலி என் விபத்தில்லாத நாளே இல்லை

தி.மு.க அரசு மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். மக்கள் ஏமாறமாட்டார்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் தேர்தல் தேதி அறிவித்து விட்டதால் இனி இலவசம் அறிவிக்க முடியாது தமிழக்ததில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல்கள், குண்டர்கள் தாக்குதல் அதிகரிதது விட்டன மக்கள் நிம்மதியாக வாழ் முடியவில்லை மக்கள் நிம்மதியாக வாழ அ.தி.மு.க கட்சிக்கும் அ.தி.மு.க கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்கவேண்டும். 

கருணாநிதி தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி மக்கள் தாயராக இருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழினம் அழிந்து வருகிறது. அங்கு எத்தனை தமிழ் பெண்கள் கற்புடன் வாழ்ந்து வருகிறார்கள் என தெரியவில்லை தமிழனை காப்பாற்ற நாதியற்ற தி.மு.க அரசு. எல்லோரும் மண்ணுக்குள்ளே தங்கத்தை தேடுவோம் நாம் புரச்சி தலைவியை பொன்மனச்செம்மலை நமது தங்கத்தை மண்ணில் புதைத்து வைத்துள்ளோம் எப்போதும் தோற்கின்ற கட்சி அ.தி.மு.க கட்சி அல்ல எப்போதாவது தோற்கின்ற கட்சிதான் அ.தி.மு.க கட்சி மக்கள் எங்கள் பக்கம், இனி அதிகாரிகள் காவல்துறையினர் எங்கள் பக்கம் வருவீர்கள். தி.மு.க கட்சி போல் கொள்ளை அடிக்கும் கட்சி அல்ல அ.தி.மு.க கட்சி மக்களுக்கு உதவும் கட்சி ஆகும். தேர்தல் நேரத்தில் nullத்தில் உள்ள அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் மஞ்சினி முருகேசன், அழகம்மாள், பெருமாள், இளையகண்ணு, மாவட்ட அவைத்தலைவர் அம்மாசி, மாவட்ட பொருளாளர் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜூ, தேவகிபாலசந்தர், தலைவாசல் முன்னார் சேர்மன் இளங்கோவன், தங்கமணி, மகேந்திரன், மாவட்ட இளைஞர்  இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆனந்தபாபு, மாவட்டபேரவை அவைத்தலைவர் குபேந்திரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் தமிழ்மணி, எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்  அர்சுணன், எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முல்லைவாடி ராமர், மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர்  பெரியசாமி, மெடிக்கல் ராஜசேகர், மாவட்ட மகளிரணி செயலாளர் பொன்னம்மாள், மகளிரணி இணை செயலாளர் சித்தேரி செல்லம்மாள், இலக்கிய அணி இணை செயலளர் ராமசந்திரன், ஆத்தூர் தொகுதி கழக செயலாளர் ஜெய்சங்கர், இணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஏத்தாப்nullர் குமார், கெங்கவல்லி பகுதி கழக இணை செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவராஜன், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, ராஜா, முருகேசன், ரமேஷ், சதீஷ், மணி, வையாபுரி, பேரூர் கழக செயலாளர்கள் மணிவண்ணன், சிவகுமார், செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் nullண்டு சுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி கல்லாநத்தம் மாதேஸ்வரன், தலைவாசல் ஒன்றிய இல்ககிய அணி செயலாளர் வக்கீல் மாரிமுத்து, தலைவாசல் ஒன்றிய மாணவரணி செயலாளர் வக்கீல் வேல்முருகன், நகர துணை செயலாளர்கள் ராஜேந்திரகுமார், ஆனந்தன், லட்சுமணன், சொக்கலிங்கம், சித்தேரி பரமசிவம், தேவியாக்குறிச்சி சுந்தரம், மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆத்தூர் ஒன்றி செயலாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis