முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கதர் விற்பனையை அதிகரிக்க அமைச்சர் அறிவுரை

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.23 - கதர் துணிகள் விற்பனையை இந்தாண்டு அதிகரித்து லாபத்தை அரசுக்கு ஈட்டித்தர வேண்டுமென அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அமைச்சர் செந்தூர் பாண்டியன் அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பதவி ஏற்றபின்பு முதன் முதலாக நேற்று மதுரை வந்தார். பைபாஸ் ரோட்டில் உள்ள கதர் மற்றும் கிராமத்தொழில் வாரிய மதுரை மண்டல அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தூர் பாண்டியன் சென்றார். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதுதான் மதுரை மண்டல அலுவலகம். அங்கு அமைச்சரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர். பின்னர் அலுவலகத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமையில் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மண்டல துணை இயக்குனர் ஜெயராஜ், இணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன், விருதுநகர் உதவி இயக்குனர் நாகரத்தினம், நெல்லை உதவி இயக்குனர் சங்கரன், நாகர்கோயில் உதவி இயக்குனர் அருணாசலம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தாண்டு கதர் வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் கதர் துணிகள், பட்டு சேலைகள் மற்றும் பல்வேறு பொருட்களின் உற்பத்தியை பெருக்கி விற்பனையை அதிகரித்து அரசுக்கு லாபத்தை அதிகரிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு துறைவாரியாக ஆய்வு செய்து மக்கள் நலனை காக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று துறை வளர்ச்சி குறித்து மாவட்ட வாரியாக ஆய்வினை மேற்கொள்ள வேண்டுமென ஆணையிட்டுள்ளார். அவரது ஆணையினை ஏற்று எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கதர் கிராம தொழில் வாரியத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி வருகிறேன். இந்த கூட்டத்தில் மக்கள் நலன் தரும் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் இதுபற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துறையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த துறை லாபத்தில் இயங்குவதற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

அமைச்சர் செந்தூர் பாண்டியனுடன் மதுரை வடக்கு 2-ம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் கே.ஜெயவேல், வட்டச் செயலாளர் எஸ்.ஐ. கணேசன், இளைஞர், இளம்பெண் பாசறை பகுதி செயலாளர் அசோக், ஜெயராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago