தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் அரசு செலவில் விளம்பரம் செய்ய தடை

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
ECI

 

புதுடெல்லி,மார்ச்.3 - தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சாதனைகளை அரசு செலவில் விளம்பரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. 

தமிழகம், கேரளம், புதுவை, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை நேற்றுமுன்தினம் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமுலுக்கு வந்துள்ளன என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

இதனையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விதிமுறை அமுல் செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இருக்கும் ஆளும் கட்சிகள் நடந்துகொள்ள வேண்டுமென்பதோடு எந்தவித புகாருக்கும் காரணமாக இருக்கக்கூ

டாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அரசின் சாதனைகளை தொலைகாட்சியிலோ, வானொலியிலோ,பத்திரிகைகளிலோ மக்கள் பணத்தில் விளம்பரப்படுத்தக்கூடாது. அதாவது அரசு பணத்தில் விளம்பரம் செய்யக்கூடாது. ஏற்கனவே தொலைகாட்சியிலோ அல்லது வானொலியிலோ விளம்பரம் கொடுத்திருந்தால் அதை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நிறுத்தியிருக்க வேண்டும். பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தக்கூடாது. அப்படி விளம்பரம் செய்திருந்தால் அதை உடனடியாக வாபஸ் பெற்றுவிட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: