முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு நாட்டு உறவுக்கு முன்னுரிமை: ஹீனா ரப்பானி

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை23 - இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு உறவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானிகர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பி.டி.வி.க்கு அந்நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஹீனா ரப்பானி கர் பேட்டியளித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவது என்ற இந்தியாவின் முடிவு சாதகமானது என்றும் இந்தியாவுடன் அடுத்து நடக்கும் பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளின் உறவுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமான நிலையில்  உள்ளன என்றும் அவர் இது திருப்தி அளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

அடுத்து நடக்கும் இரு நாட்டு பேச்சுவார்த்தைகளில் எல்லா பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும். அதே சமயம் அந்த பிரச்சினைகளுக்கான மூல காரணங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் கர் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு இந்தியா மீண்டும் வந்துள்ளதே பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர்  கூறினார்.

வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் குறித்து தானும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவும் பேச்சு நடத்த இருப்பதாகவும் கர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் வருகிற 26 ம் தேதி இந்தியா வருகிறார். அதற்கடுத்த நாள் அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

இந்திய துணைக் கண்டத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவுதற்காக பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுடன் குறிப்பாக இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் சாதகமான  போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் அவர்  கூறினார்.

ஆப்கானிஸ்தானில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் பாகிஸ்தானுக்கு முக்கியமானது ஏனென்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் எதிர்காலம் இரு நாடுகளுடனும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்