முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம்: ப.சிதம்பரம் மீதும் சந்தேகம் - நல்லக்கண்ணு

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

திருவள்ளூர், ஜூலை.23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய கட்டுபாடு குழுத்தலைவருமான நல்லக்கண்ணு கூறியுள்ளார். திருவள்ளூர் பஜார் வீதியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊழல் எதிர்ப்பு பிரச்சார மெழுகுவர்த்தி ஏந்தி தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது. சி.பி.எம் வட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ வட்ட செயலாளர் கே.கஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

சி.பி.ஐ மாவட்ட செயலாலர் ஏ.எஸ்.கண்ணன், சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ராமன், மாவட்ட குழு உறுப்பினர் ஜே.வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு சிறப்புரையாற்றிய விபரம் வருமாறு:-

அண்மை காலத்தில் எதிர்பாராத அளவுக்கு நாட்டினுடைய அத்தனை செல்வங்களையும் கொள்ளை கொண்டு போகப்படுகிறது.  அதை ஏழை, எளியோர்கள் கொள்ளையடிக்கவில்லை. ஏழை, இந்திய நாட்டின் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசின் உயர்த்த பதவியில் இருப்பவர்களும் மத்தியில் இருந்தவர்களும்தான் நமது நாட்டின் அத்தனை செல்வங்களும் கொள்ளையடித்து போகிறார்கள் என்பதுதான் இன்றைக்குள்ள நிலைமை. இதற்கு முன்னால் இருந்ததெல்லாம் அப்படி கிடையாது. இந்தியாவின் நிபுணர்கள் பல பேர் பல உண்மைகளை செல்லியிருக்கிறார்கள். 

இந்த நாட்டில் என்ன வளமிருந்தாலும், அந்த வளத்தையெல்லாம் பெரும் முதலாளிகளுக்கும், கொள்ளையடிக்கக்கூடிய முறையில் இந்தியாவிலுள்ள முதலாளிகளும் சேர்த்து கொண்டு நம்முடைய நாட்டை வெளிநாடுகளுக்கு அடமானம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எதிர்த்துத்தான் இன்றைக்கு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த அடமானம் வைக்கக் கூடிய தொழில் வந்தபிறகுதான், இந்தியாவின் கோடானகோடி மக்களினுடைய, சாதாரண மக்களைப்பற்றி கவலைப்படவில்லை. வியாபாரிகள் பற்றி கவலைப்படவில்லை. சிறு வியாபாரிகளை பற்றி கவலைப்படவில்லை. அதற்கு மாறாக இந்தியாவில் வெளிநாட்டு வியாபாரிகளுக்கு வால்மார்க் போன்ற கம்பெனிகளுக்கும் மற்றும் பாரத் கம்பெனிகளுக்கும் இந்தியாவை அடமானம் வைக்கக்கூடிய அளவிற்கு பெரிய வியாபாரத்தை எல்லாம் கையில் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

1990-க்கு பிறகு ஏற்பட்ட ஊழலில் பெரிய ஊழல் கருப்பு பணம் என்பது ரூ.75 லட்சம் கோடி சுவிட்சர்லாந்திலும், இன்னும் பல நாட்டு வங்கிகளிலும் இந்த நாட்டுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கருப்புப் பணம் என்பது இங்கிருந்த பெரிய முதலாளிகள் கள்ளப்பணத்தை காட்டி, அதிகாரிகளையும் கையில் போட்டு, பணத்தை உள்நாட்டில் வைத்தால் பிடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து வெளிநாட்டிலே அந்த பணத்தை வைத்திருக்கிறார்கள். 1990-க்கு பிறகு வைத்த பணம்தான் இன்றைக்கு ரூ.75 லட்சம் கோடி. ரூ.75 லட்சம் கோடியை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் திரும்ப கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சியை சேர்ந்த நாங்களெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தும்போது இன்றைக்கு யார், யார் வைத்திருக்கிறார்கள் என்ற பெயரை போட வேண்டும். நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம்.

நாட்டின் மக்கள் தொகையையும், வறுமையையும், வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த தயாராக இல்லை. ஆனால் இந்த நாட்டை பூராகவும் ஏமாற்றி, வெளிநாடுகளில் ரூ.75 லட்சம் கோடி வைத்திருக்கிறார்கள். இந்த ரூ.75 லட்சம் கோடி என்பது நம்முடைய இந்திய நாட்டின் ஒரு வருட பட்ஜெட் ரூ.11 லட்சம் கோடிதான்.

வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருப்பது ரூ.75 லட்சம் கோடி. 10 ஆண்டுகளுக்கு நமது நாட்டில் பட்ஜெட் போடலாம் அந்த பணத்தை வைத்து. 120 கோடி மக்களுக்கு 10 ஆண்டுகள் பட்ஜெட் போடக்கூடிய பணம் வெளிநாடுகளில் கருப்பு பணமாக போய்க் கொண்டிருக்கிறது. கருப்பு பணம் போடக்கூடியவன் அந்த பணத்தை யாரும் கைவசப்படுத்த கூடாது என்பதற்காக இந்த அதிகாரிகளுக்கும்  பணம் கொடுத்து விடுவார்கள். இந்த அமைச்சர்களுக்கும் பணம் கொடுத்து வருவார்கள். ஆகவே இவர்களையெல்லாம் வாய் கட்டி விடுவார்கள்.

வளமிக்க நாட்டை கொள்ளையடிப்பதற்கு அரசியல்வாதிகளும், உலக பெரு முதலாளிகள் எல்லாம் கொள்ளையடிக்க திட்டமிட்டு விட்டார்கள். 2 ஜி ஸ்பெக்ட்ராம் வந்த பிறகு யார் யார் எல்லாம் அகப்படுவார்கள் என்று ஒவ்வொலுவரும் பயந்து கொண்டிருக்கிறார்கள். ராஜா மந்திரியாக இருந்து மத்திய அமைச்சராக இருந்து அவர் காலத்தில் ஏற்பட்ட ஊழல் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அவர் செய்திருக்கிறார் என்றால் அவர் மாத்திரம்  அல்ல. அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் ஒவ்வொன்றாக வருகிறது. அதற்கு பங்குபோட்டவர்கள் கனிமொழியும் ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறது.

இப்போது கலைஞர் டி.வி.யில் உள்ள சரத்குமாரும் திகார் சிறையில் இருக்கிறார். இன்னும் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சிதம்பரம் மீதும் சந்தேகம் கிளப்பப்படுகிறது. தயாநிதி மாறன் பற்றியும் வந்து விட்டது. கார்கில் போரில் உயிர் இழந்தவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள், ராணுவ அதிகாரிகளே பயன்படுத்தி விட்டார்கள் என்ற ஊழல் வெளியே வருகிறது. இப்போது 3 ஜி என்ற வழக்கும் வருகிறது. நாட்டில் ஊழல் அதிகமாகி விட்டது. விலைவாசியை கட்டுப்படுத்த தயார் இல்லை. ஊழல் செய்வதற்கு தயாராக இருந்திருக்கிறார்கள், உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வதற்கு மத்திய அரசு அந்த தொழில் முதலாளிகளுக்கு கடன்பட்டு விட்டார்கள். இந்த 5 ஆண்டுகளில் மட்டும் முகேஷ் அம்பானிக்கு மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருக்கிறது. இதுவரையில் இந்த நாடு இவ்வளவு பெரிய ஊழலை சந்தித்தது கிடையாது. ஜனநாயக நாடு மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய நாடு. இப்படி ஒவ்வொன்றாக ஊழல் வரும்போது, வாக்களித்த மக்களுக்கு அடுத்து என்ன வரும்? நாட்டில் ஜனநாயகம் நிலைக்குமா? ஊழல் அதிகமாகி விட்டபிறகு ஜனநாயகம் நிலைப்பது சந்தேகம்.

நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் ஏற்பட முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களே மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் நம்பிக்கை குறைய ஆரம்பிக்கிறது. ஆதலால் ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும் என்று பேசினார். சுதந்திர போராட்ட தியாகியும், தேசிய கட்டுப்பாட்டு தலைவருமான நல்லக்கண்ணு அவர்கள் சி.பி.ஐ. - திருவள்ளூர் நகர செயலாளர் டி.லோகநாதன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்