முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொக்கிஷத்தை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.23 - கேரள மாநிலம் பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. தேசிய அருங்காட்சியகத்தின் பொது இயக்குனர் சி.வி.ஆனந்த் போஸ் தலைமையிலான இந்த குழுவில் இந்திய தொல்லியல் அமைப்பு ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இடம் பெறுவர். நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள், சிலைகள் உள்ளிட்டவற்றை வகை பிரித்து மதிப்பிடுவது, அவற்றை நீண்ட காலம் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஆலோசனை வழங்குவது ஆகிய பணிகளை இந்த நிபுணர் குழு மேற்கொள்ளும். கோயிலில் இருந்து பொக்கிஷங்களை எடுக்கும் பணிகளை கண்காணிக்க 3 பேர் கொண்ட மற்றொரு குழுவையும் சுப்ரீம் கோர்ட் நியமித்தது. 

இந்த குழுவில் கேரள ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.என். கிருஷ்ணன், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, ஓர் அரசு பிரதிநிதி ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த பணிகளை மேற்கொள்ளும் போது அதிகாரபூர்வமற்ற யாரையும் அந்த பகுதியில் அனுமதிக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோயிலில் கிடைத்திருக்கும் பொக்கிஷங்களின் மதிப்பு குறித்து செய்தி வெளியிடும் போது ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்