முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது? மத்திய விளையாட்டுத் அமைச்சகம் பரிந்துரை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. - 24  - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கருக் கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு -  கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை புரிந்த டெண்டுல்கருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டு ம் என்று அரசியல் வாதிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமீபகால மாக வலியுறுத்தி வருகின்றனர். விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவருக்கு பாரத ரத்னா விருது வழங் க இயலாது என்ற காரணத்தால் அவருக்கு இன்னும் அந்த விருது வழ ங்கப்படாமல் இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் பாரத ரத்னா விருதுக்கான சட்ட திருத்த வழிகாட்டுத லில் விளையாட்டுத் துறையும் இடம் பெற வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக் கான் பரிந்துரை செய்துள்ளார்.
மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்ட இந்த பரிந்துரை கடிதம், பிரதமர் அலுவலக பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டெண்டுல்கருக்கு விரைவில் பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என் று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக 2008 -ம் ஆண்டு இந்துஸ்தான் இசை பாடகர் பீஷ்மன் ஜோஷிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குஹிப்பிடத்தக்கது.
மும்பை வீரரான டெண்டுல்கர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக ளில் அதிக சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். தவிர, டெஸ்ட் மற்று ம் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தும் சாதனை புரிந்துள்ளது நினைவு கூறத்தக்கது.
இந்திய அணி தற்போது இங்கிலாந்திற்கு எதிராக 4 போட்டிகள் கொ  ண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் டெண்டுல்கர் 100 -வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago