பஸ் தினம் கொண்டாட ஐகோர்ட்டு தடை

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      தமிழகம்
Busday 0

 

சென்னை, பிப்.3 - வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த பொதுநல வழக்கில் பஸ் தினம் கொண்டாட ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதுபற்றி விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  சென்னையை சேர்ந்த வக்கீல் சுதன் ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் மாணவர்கள் ஆண்டு தோறும் பஸ் தினம் கொண்டாடுகின்றனர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. பஸ் பயணிகள் பாதிக்கப் படுகின்றனர். சில சமயங்களில் பஸ் தின கொண்டாட்டம் வன் முறையில் முடிகிறது. சமீபத்தில் சென்னை பச்சையப்பா கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்களின் பஸ் தினத்தில் போலீசார், மாணவர்கள் இடையே மோதல் சம்பவம் நடைபெற்றது. வீடு, விடுதியில் இருந்து தங்களை பாதுகாப்பாக கல்லூரிக்கு அழைத்து செல்லும் மாநகர பஸ் ஊழியர்களை கவுரவப்படுத்தும் விதமாகவே நல்லெண்ண அடிப்படையில் பஸ் தினம் கொண்டாடுவதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த கொண்டாட்டம் சமீப காலமாக விரும்பத்தகாத சம்பவமாக மாறி விட்டது. எனவே கல்லூரி மாணவர்கள் கொண்டாடும் பஸ் தினத்தை ஒழுங்குபடுத்த விதி முறைகள் வகுக்கும் படி போலீசார் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகத்திற்கும் உத்தரவிட வேண்டும். அதுவரை பஸ் தினத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். 

இந்த மனுவை தலைமை நீnullதிபதி எம்.ஒய்.இக்பால் nullநீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, பஸ் தினம் கொண்டாடுவதற்கு தடை விதித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பஸ் தினத்தை தடுக்குமாறு அனைத்து கல்லூரி முதல்வருக்கும் அரசு வலியுறுத்த வேண்டும். இந்த உத்தரவை கல்வித்துறை அனைத்து கல்லூரிகளுக்கும் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இது குறித்து பஸ் தினம் கொண்டாட அனுமதிக்கும் கல்லூரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்

இதை ஷேர் செய்திடுங்கள்: