காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கிய இளம் பெண்...!

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      தமிழகம்
suicide

 

சென்னை, மார்ச்.3 -​ விசாரணைக்கு அழைத்துச்சென்ற இளம் பெண் காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கியதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது பற்றி விபரம் வருமாறு:-

மாதவரம் மில்க் காலனியில் வசித்து வருபவர் கரோலின். இவரது வீட்டில் மேஜை டிராயரில் வைத்திருந்த 1 பவுன் நகை மாயமானது.இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில் கரோலின் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் கரோலின் வீட்டில் வேலை செய்து வந்த பானு (25)விடம் விசாரணை நடத்தினார்.

போலீஸ் நிலையத்தில் வைத்து பானுவிடம் விசாரணை நடத்தப்பட்டது.   அப்போது கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச்சென்ற பானு நீnullண்ட நேரமாகியும் திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்தனர். கழிவறை உள்பக்கமாக nullட்டப்பட்டிருந்தது. கழிவறை கதவில் துப்பட்டாவால் தூக்கு போட்டு பானு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போலீசார் பானுவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகை திருட்டு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: