முக்கிய செய்திகள்

பாபா ராம்தேவை திருமணம் செய்வேன் பிரபல நடிகையின் ஆசை

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

மும்பை,ஜூலை.- 28 - பிரபல சாமியார் பாபா ராம்தேவை திருமணம் செய்ய விரும்புவதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அறிவித்துள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அதிரடிக்கு பேர் போனவர். இவர் ஏற்கனவே டெலிவிஷன் மூலம் சுயம்வரம் நடத்தி கனடாவில் உள்ள தனது மாமனார் வீடு வரை சென்று வந்த அவர், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் துரத்தி விட்டார். மும்பையில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய யோகா சாமியார் ராம்தேவ் பற்றி கேள்வி எழுந்தது. அப்போது ராம்தேவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக திடீரென கூறி கூட்டத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். மேலும் அவர் கூறுகையில், பாபா ராம்தேவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மற்றவர்களுக்குத்தான் பாபா. எனக்கு அவர் கணவர். அவரை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது. எப்போதும் அவர் கூடவே ஒரு சீடர் போல் இருக்க விரும்புகிறேன். என்னை அவர் மணக்க சம்மதித்தால் சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: