முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. - 28 - இந்திய அணிக்கு எதிராக டிரன்ட்பிரிட்ஜ் நகரில் நடைபெற இருக்கும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.  கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கி லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலை மையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடந்தது. 

இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 196 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. வராலாற்று சிறப்பு மிக் க இந்த டெஸ்டில் இந்திய அணி தோல் வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 

இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடை யேயான 2 -வது டெஸ்ட் போட்டி டிரன்ட்பிரிட்ஜ் நகரில் 29 -ம் தேதி துவங்குகிறது. இதில் விளையாடும் இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 

இந்திய அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் விளையாடிய அதே வீரர்களே இந்த இரண்டாவது டெஸ்டிலும் பங்கேற்க உள்ளனர். இங்கிலாந்து அணி விபரம் வருமாறு - 

ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், இயான் பெல், டிம் பிரஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், அலிஸ்டார் குக், இயான் மோர்கன், கெவின் பீட்டர்சன், மட் பிரையர், கிரீம் ஸ்வான், கிறிஸ் டிரம்லெட், மற்றும் ஜோனாதன் டிராட் ஆகியோர். 

இந்திய அணியில் வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர்கான் தசைப் பிடி ப்பு காரணமாக முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை. இது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago