முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா நம்பர் - 1அணி போல விளையாடவில்லை முன்னாள் வீரர்கள் வருத்தம்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை. - 28  - லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி நம்பர் - 1 அணி போல ஆடவில் லை என்றும், மோசமாக ஆடியது என்று முன்னாள் வீரர்கள் பலர் வேதனையுடன் வருத்தம் தெரிவித்து உள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு -  இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 193 ரன் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தது. 20 ஓவர்கள் மீதம் இருக்கும் போதே அனைத்து விக்கெட்டுகளும் வீழந்தன. இது இந்திய அணிக்கு தலைக் குனிவை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கின்றது. இங்கிலாந்து அணியோ 3 -வது இடத்தில் உள்ளது. 

இந்தத் தொடரில் இன்னும் 3 டெஸ்டுகள் உள்ளன. இனி வரும் போட்டிகளிலும் வென்று முதல் இடத்தைப் பிடிக்க அது முனைந்து வருகின்றது. அதற்கு இடம் கொடுக்காமல் இந்திய வீரர்கள் ஆடினால் தான் நல்லது. 

ஆனால் அது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் காயம் அடைந்த வீரேந்தர் சேவாக் அடுத்தப் போட்டியிலும் ஆடுவாரா? என்பது சந்தேகமாக உள்ளது. 

அதைப் போல ஜாஹிர்கானும் 2 -வது போட்டியில் பந்து வீச மாட்டார் என்றே தெரிகின்றது. இந்த நிலையில், முன்னாள் வீரர்கள் சிலரு ம் கருத்து தெரிவித்து உள்ளார்கள். அதில் பிஷன் சிங் பேடி, கூறியதா வது - மாட் பிரையர் (இங்கிலாந்து) ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் மற்று ம் மட்டையாளர். அதைப் போல மகேந்திர சிங் தோனியும், ஒரு சிற ந்த விக்கெட் கீப்பராகவும், மட்டையாளராகவும் இருந்தார். இப்போ  து, மட்டையாளருக்குப் பதில் பந்து வீச்சாளராக மாறி விட்டார். 

நமது பந்து வீச்சாளர்கல் இங்கிலாந்தை கட்டுப் படுத்த தவறி விட்டா ர்கள். மோசமான வியூகம் தான் இதற்கு காரணம் என்று அவர் தெரி வித்தார். 

திலீப் வெங்க்சர்க்கார் கூறியதாவது - ஜாஹிர்கான் மிக முக்கியமான பந்து வீச்சாளர். அவரை இழந்தது தான் நமக்கு பேரடி. 3 பந்து வீச்சா ளர்களுடன் ஆடுவது மிகவும் சிரமம். 

இருந்தாலும், அடுத்தப் போட்டியில் நமது வீரர்கள் முன்னேறி விடு வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர். இவர் இந்த லார்ட்ஸ் மைதானத்தில் 3 சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், லார்ட்ஸ் மைதானம் அப்படி ஒன்றும் மோசமானது அல்ல. நன்றாக பந்து வீச முடியும். ஆனாலும் நமது பந்து வீச்சாளர்கள் கோட்டை விட்டு விட்டனர். அதைப் போல ரன்களையும் சேர்க்க முடியும். 

இங்கிலாந்து வீரர்கள் அதை நிரூபித்து விட்டனர். ஆனால் நமது வீரர் களால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்கு சரியான திட்டமிடாமையே காரணம். 

முறையாக, நடந்திருந்தால் இந்தப் போட்டியை டிரா செய்திருக்கலா ம். அல்லது நாம் கைப்பற்றி இருக்கலாம். வி.வி.எஸ். லக்ஷ்மணனும், ராகுல் டிராவிட்டும் நன்றாக ஆடினார்கள். 

மற்றவர்கள் அவர்களை பின்பற்ற தவறிவிட்டார்கள் என்று குறிப்பிட்டார். இவரது தலைமையில் 1986 -ல் இந்திய அணி அந்நாட்டுக்கு சென் று 3 - 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக் கது. 

இதைப் போல அஜித் வடேகர் கூறுகையில், இந்திய அணி முதல் நிலை அணி போல லார்ட்ஸ் டெஸ்டில் ஆடவில்லை என்றும் மோச மாக ஆடி, தோல்வியைத் தழுவியது என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்