முக்கிய செய்திகள்

வரதட்சனை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் கோர்ட்டில் சரண்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

நகரி,ஜூலை.29 - நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, கிரிஷ் பரத்வாஜ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீஜா ஐதராபாத் போலீசில் கணவர் கிரீஷ் பரத்வாஜ் மாமியார் சாவமங்களா மீது வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்ததும் இருவரும் தலைமறைவானார்கள். பின்னர் அவர்கள் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த கோர்ட் சர்வமங்களாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

கிரீஷ்பரத்வாஜூக்கு ஜாமீன் தர மறுத்தது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. 

இந்த நிலையில் அவர் ஐதராபாத் தரம்பள்ளி கோர்ட்டில் சரணடைந்தார். அப்போது நீதிபதி அவரை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: